1999: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் - பாகிஸ்தானை அலற வைத்த கும்ப்ளே! (வீடியோ)

This Day in 1999: Remembering Anil Kumble's 10 wicket | சர்வதேச அளவில் இந்த சாதனையைச் செய்த 2-வது வீரர், இந்தியாவின் முதல் வீரர் என கும்ப்ளே செய்த சாதனை, ஐசிசி மற்றும் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.

1999: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் - பாகிஸ்தானை அலற வைத்த கும்ப்ளே! (வீடியோ)
முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே. (Twitter)
  • News18
  • Last Updated: February 7, 2019, 5:06 PM IST
  • Share this:
இந்தியாவின் சுழல் மன்னன் அனில் கும்ப்ளே, 20 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை அலற வைத்தார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 20 ஆண்டுகளுக்கு 1999 பிப்ரவரி 7-ம் தேதி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது.

420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் களமிறங்கியது. ஒரு வேளை வெற்றி பெற முடியாவிட்டால் விக்கெட்டுகளை இழக்காமல் போட்டியை டிரா செய்துவிடலாம் என பாகிஸ்தான் திட்டமிட்டது.


Anil Kumble, அனில் கும்ப்ளே
1999: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளே. (ICC)


பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. அப்போது சுழல் மன்னன் அனில் கும்ப்ளே, பாகிஸ்தானின் தடுப்புச் சுவர்களை தகர்ந்தெறிந்தார். கும்ப்ளேவின் மாயாஜாலத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது.

Anil Kumble, அனில் கும்ப்ளே
முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே. (BCCI)
செய்வதறியாது தவித்த பாகிஸ்தான் அணி 207 ரன்களில் ஆல் அவுட்டானதால், இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 26.3 ஓவர்கள் வீசிய கும்ப்ளே 74 ரன்களே விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை படைத்தார். அதில் 9 ஓவர்கள் மெய்டன்கள்.சர்வதேச அளவில் இந்தச் சாதனையைச் செய்த 2-வது வீரர், இந்தியாவின் முதல் வீரர் என கும்ப்ளே செய்த சாதனை, ஐசிசி மற்றும் பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.

Also Watch...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்