78 ரன்களில் இந்தியா ஆல் அவுட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

photo credit - AP

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.ரோகித் சர்மா (19) ரகானே (18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர்.

 • Share this:
  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

  இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும்  துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த ஆட்டத்தில்  கே.எல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

  மேலும் படிக்க: கோலியை வீழ்த்தி பழிதீர்த்த ஆண்டர்சன்: இது உன் 'பேக்யார்டா’ என்ற கேட்ட கோலிக்கு பதிலடி

  இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராத் கோலி 7 ரன்களில் வெளியேறினார். ரோகித் சர்மா (19) ரகானே (18) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர். இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 78 ரன்களை எடுத்தது.

  இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் , சாம் கர்ரன் மற்றும் ஆலி ராபின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

  இதையும் படிக்க: அஜித்துக்குப் பிறகு தோனிதான்- ரேகா வடேகர் மனம் திறப்பு


  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்துள்ளது. ரோரி ஜோசப் பர்ன்ஸ் 52 ரன்களுடனும்  ஹசீப் ஹமீது 60 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
  Published by:Murugesh M
  First published: