ஷ்ரேயஸ் அய்யர் ஒரு வளரும் நட்சத்திரமாக பார்க்கப்படுபவர், கோலி, ரோஹித், ராகுலுக்குப் பிறகு 3 வடிவங்களிலும் ஆடக்கூடிய திறமை மிக்கவர், கேப்டன்சி வீரர் என்றெல்லாம் பார்க்கப்படுபவர், ஊடகங்களும் இவரை அப்படித்தான் ஊதிவிடுகின்றன. ஆனால் 1983 உலகக்கோப்பை வென்ற கபில்ஸ் டெவில்ஸ் அணியில் ஒரு டெவில் ஆக இருந்த மதன்லால் ஷ்ரேயஸ் அய்யர் பேட்டிங்கில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்தியத் தேர்வாளர்கள் அணியைத் தேர்வு செய்யும் நேரம் வரும்போது, களமிறங்கும் வீரர்களில் ஒருவராக ஷ்ரேயஸ் அய்யர் இருப்பார்.
ஆனால் அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு திணறுகிறார், மேலும் வேகப்பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சமீபத்தில் முடிந்த தொடரில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 82% தான், ஸ்பின்னர்களுக்கு எதிராக 180க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இந்த உலகக்கோப்பை வந்தாலே நம்பர் 4 வீரர் என்ற ஒரு விவகாரம் எழும், அய்யர் அதற்கான விடையாகப் பார்க்கப்படுகிறார்.
ஆனால் மதன்லால் என்ன கூறுகிறார் எனில், “சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டருக்கு பலவீனம் ஒன்று இருந்தால் பவுலர்கள் நிச்சயம் அதை குறி வைப்பார்கள். ஷ்ரேயஸ் அய்யருக்கு ஷார்ட் பிட்ச், எகிறு பந்துகளை ஆடுவதில் சிரமம் இருக்கிறது, வேகப்பந்து வீச்சுக்கு எதிராக வேகமாக ரன்களை அவரால் எடுக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியாவில் இவர் 100 அடித்தால் கூட இவருக்கு கரகோஷம் எழும், ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சு இவரை சும்மா விடாது, அங்கெல்லாம் இவர் தாங்க மாட்டார். அங்கு கருணை கிடையாது. தொடர்ந்து ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை அவருக்கு வீசியவண்ணமே இருப்பார்கள், அதுவும் இப்போது உள்ள டெக்னாலஜி மூலம் பேட்டரின் பலவீனங்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விடுகின்றனர்” என்கிறார் மதன்லால்
இவர் கூறுவது உண்மைதான் முதன் முதலில் 2020 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 0, 12 not out, 2, 38. 19 என்று வழிந்தார். வேகப்பந்து வீச்சாளர்களை இவரால் அடிக்க முடியவில்லை என்பதோடு ரன்களையும் இவரால் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shreyas Iyer, T20 World Cup