தோனி மீண்டும் நீல நிற ஜெர்சி அணிவதை அவர்கள் விரும்பவில்லை! கோச் சொல்கிறார்

MS Dhoni | உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் பேட்டிங் செய்த தோனி 273 ரன்கள் எடுத்துள்ளார்.

தோனி மீண்டும் நீல நிற ஜெர்சி அணிவதை அவர்கள் விரும்பவில்லை! கோச் சொல்கிறார்
தோனி
  • News18
  • Last Updated: July 18, 2019, 9:47 AM IST
  • Share this:
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கருத்துக்கள் எழுந்துவரும் நிலையில், தோனியின் பெற்றோர்களே அவர் ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புவதாக சிறுவயது கோச் கூறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. எனினும், இது தொடர்பாக அவர் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

Also Read: தோனியை கடைசியில் இறக்கியது தவறு... இன்னொரு சூப்பர் ஓவர்...! சச்சின் டெண்டுல்கர் கருத்து


தோனி ஓய்வு பெறவில்லை என்றாலும், அடுத்து வரும் தொடர்களில் அவர் மற்ற வீரர்களைப் போல சமீபத்திய பார்ம் அடிப்படையில் அணியில் இருப்பார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. “இனிமேல் இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் தோனி முதன்மையாக விக்கெட் கீப்பராக செல்லமாட்டார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் அணியில் தோனி இடம்பெறுவார். ரிஷப் பண்ட்க்கு தோனி வெளியில் இருந்து ஆலோசனை வழங்குவார் ” என்று செய்திகள் கூறுகின்றன.

Also Read: சச்சின் வெளியிட்ட உலக லெவன் அணியில் 5 இந்திய வீரர்கள்...! தோனிக்கு இடமில்லை

தோனி தற்போதைய நிலையிலேயே ஓய்வு பெற வேண்டும் என்றும், இல்லை அவர் இன்னும் சிறிது காலம் அணிக்கு பங்களிப்பு அளிக்கலாம் என்றும் கலவையான கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இந்த சூழலில், தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி, தோனி ஓய்வு பெறுவதையே அவரின் பெற்றோர் விரும்புவதாக கூறியுள்ளார்.
தோனி குடும்பத்துடன்


ஸ்போர்ட்ஸ் டாக் என்ற ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “தோனி ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரின் பெற்றோர் என்னிடம் கூறினர். தோனி அடுத்துவரும் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று நான் கூறினேன்” என்று பானர்ஜி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் பேட்டிங் செய்த தோனி 273 ரன்கள் எடுத்துள்ளார். அரையிறுதிப்போட்டியில் அவர் வழக்கத்துக்கு மாறாக ஏழாவது களமிறங்கியதும் விமர்சிக்கப்பட்டது.

Also See...

பிரபல கிரிக்கெட் வீரர்கள் வயதனால் எப்படி இருப்பார்கள்!தோனியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்...!

First published: July 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading