ஜடேஜாவை பேட்டிங்குக்காக எடுத்துள்ளனர், இது மிகப்பெரிய தவறு: சஞ்சய் மஞ்சுரேக்கர்

ஜடேஜா.

மழை, குளிர், மேகமய வானிலைக்கேற்ப அணித்தேர்வைச் செய்திருக்க வேண்டும், ரவீந்திர ஜடேஜாவை பேட்டிங்குக்காக தேர்வு செய்துள்ளனர், இது அர்த்தமற்றது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மழை, குளிர், மேகமய வானிலைக்கேற்ப அணித்தேர்வைச் செய்திருக்க வேண்டும், ரவீந்திர ஜடேஜாவை பேட்டிங்குக்காக தேர்வு செய்துள்ளனர், இது அர்த்தமற்றது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.

  உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் இந்திய அணி 6ம் நாளில் 170 ரன்களுக்குச் சுருள, நியூசிலாந்து அணி139 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது.

  இந்திய அணித்தேர்வில் எப்போதும் போலவே கோலி தவறு செய்தார், அஸ்வின், ஜடேஜா என்று இருவரையும் வைத்திருந்தார், ஆனால் ஜடேஜாவை பேட்டிங்குக்காக வைத்திருந்தது போல்தான் தெரிந்தது. பவுலிங் அவருக்கு அந்தப் பிட்ச்களில் வராது, குழிப் பிட்ச் ஸ்பெஷலிஸ்டைப் போய் நல்ல பிட்சில் போடச்சொன்னால் என்ன செய்வார்?

  Also Read: 1983 June 25th World Cup | இதே ஜூன் 25ம் தேதி: 1983 உலகக் கோப்பையை வென்ற ‘கபில்ஸ் டெவில்ஸ்’- இந்திய அணியின் இரும்பு மனிதன் ‘ஜிம்மி’ அமர்நாத்

  இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் மிகச்சரியான ஒரு விமர்சனத்தை முன் வைத்துள்ளார்:

  இந்திய அணித் தேர்வு விவாதத்துக்குரியது, வானிலை மேகமூட்டமாக இருக்கும்போது 2 ஸ்பின்னர்கள் தேவையா? அதுவும் டாஸ் போட்டதே 2ம் நாளில்தான். ஒரு வீரரை அவரது பேட்டிங்குக்காகத் தேர்வு செய்தனர், அது ஜடேஜா. அவரது இடது கை ஸ்பின் உதவும் என்று அவரைத் தேர்வு செய்யவில்லை.

  ஜடேஜாவை பேட்டிங்குக்காகத் தேர்வு செய்வதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஸ்பெஷலிஸ்ட் பிளேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிட்ச் வறண்டு வெயில் அடித்தல் ஜடேஜாவைத் தேர்வு செய்வதில் நியாயம் உள்ளது. ஆனால் பேட்டிங்குக்காக அவரை தேர்வு செய்வதில் அர்த்தமில்லை, அதுதான் பின்னடைவுக்குக் காரணம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஹனுமா விகாரியை எடுத்திருக்கலாம் அவர் நல்ல தடுப்பாட்ட வீரர். 170 ரன்கள் என்பது 220 அல்லது அதற்கும் மேலும் சென்றிருக்கலாம்.

  இங்கிலாந்து இத்தகைய தவறுகளைச் செய்து கொண்டிருந்தது. இன்னொரு திறமை இருக்கிறது என்பதற்காக ஒருவரை தேர்வு செய்வது பெரும்பாலும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதுவும் நெருக்கடியான ஆட்டங்களில் அந்த மாதிரியான வீரர்கள் கைகொடுத்ததில்லை. அதே நிலைதான் இங்கு ஜடேஜாவுக்கும்.

  இவ்வாறு கூறினார் மஞ்சுரேக்கர்.
  Published by:Muthukumar
  First published: