முகப்பு /செய்தி /விளையாட்டு / நான் திராவிட் அல்ல ‘டேவிட்’- ராகுல் திராவிட் ருசிகரம்

நான் திராவிட் அல்ல ‘டேவிட்’- ராகுல் திராவிட் ருசிகரம்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

டேவிட் என்று ஆங்கிலத்தில் எழுதினால் கூட அதை திராவிட் என்று படிக்க வாய்ப்பிருக்கும் ஒரு பெரும்புள்ளியாக இன்று திராவிட் திகழ்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தன் பள்ளி நாட்களில் கிரிக்கெட் ஆடிய காலத்தில் தான் சதமெடுத்தாலும் தன் பெயர் பிரபலமடையாது இருந்தது தனக்கு ஒரு உத்வேகத்தை ஊட்டி தன் பெயரை அனைவரும் அறிய நிலைநாட்டுமாறு செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் திராவிட், தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது Dravid என்று எழுதினால் இப்படி ஒரு பெயர் இருக்க முடியாது என்று டேவிட் என்று மாற்றி விடுவார்கள் என்று கூறியது உண்மையில் ருசிகரமான ஒரு விஷயமே.

பள்ளியில் படிக்கும் போது ஒரு போட்டியில் ராகுல் திராவிட் சதமெடுத்தார், ஆனால் இதனை குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திராவிட் என்ற பெயரை டேவிட் என்று திருத்தி தன் பெயரை எழுதியதை திராவிட் நினைவு கூர்ந்தார்.

“அந்தப் பத்திரிக்கை எடிட்டர் என் பெயரில் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது என்று திராவிட் ஆகிய என்னை டேவிட் என்று திருத்தி விட்டார். திராவிட் என்று யாரும் இருக்க முடியாது என்பது அவரது துணிபு, எனவே நான் திராவிட் அல்ல டேவிட் புரிகிறதா?

ஏனெனில் டேவிட் பொதுவான ஒரு பெயர். எனக்குமே இது ஒரு பாடமாக அமைந்தது சதமெடுத்து விட்டால் நம் பெயர் பிரபலமாகிவிடும் என்று நினைத்த எனக்கு இது ஒரு புரிதலை அளித்தது, என்னதான் சதமெடுத்தாலும் உன் பெயர் இன்னும் பிரபலமாகவில்லை என்பதை நினைவுபடுத்தியது. மக்களுக்கு என் பெயர் என்ன என்பது கூட இன்னும் பதிவாகவில்லை என்பதை உணரச் செய்த சம்பவம் இது.

என் பெயரில் கூட அவர்களுக்கு நம்பிக்கையில்லாமல் திருத்தினார்களே” என்கிறார் ராகுல் திராவிட்.

இப்படிப்பட்ட ராகுல் திராவிட் என்றால் இன்று யாரும் டேவிட் என்று தப்பாகக் கூட சொல்ல மாட்டார்கள், டேவிட் என்று ஆங்கிலத்தில் எழுதினால் கூட அதை திராவிட் என்று படிக்க வாய்ப்பிருக்கும் ஒரு பெரும்புள்ளியாக இன்று திராவிட் திகழ்கிறார்.

First published:

Tags: Rahul Dravid