எங்களை இந்திய அணி நசுக்கியது, எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாதது ஏமாற்றமளிக்கிறது: மோர்கன் வெளிப்படை

எங்களை இந்திய அணி நசுக்கியது, எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாதது ஏமாற்றமளிக்கிறது: மோர்கன் வெளிப்படை

இயான் மோர்கன்.

புள்ளி விவர ரீதியாக இங்கு விரட்டல் வெற்றி பெறும், ஏனெனில் பனிப்பொழிவு இருக்கும், ஆனால் நேற்று பனிப்பொழிவு இல்லை. இந்தியாவை பாராட்டுகிறேன்.

 • Share this:
  அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய பவுலிங் இங்கிலாந்தை முடக்கியது. பேட்டிங்கில் தொடகத்திலிருந்தே பாசிட்டிவ் ஆக ஆடி இங்கிலாந்தை பின்னடையச் செய்தது.

  இதனையடுத்து தங்களால் முடக்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

  இங்கிலாந்து நேற்று பவர் ப்ளே முடிவில் 44/1 என்று இருந்தது. 10 ஓவர்கள் முடிவில் 83/2 என்று வலுவாக இருந்தது. ராய் பேர்ஸ்டோ களத்தில் இருந்தனர். அடுத்த 5 ஓவர்களில் கூட பரவாயில்லை 47 ரன்கள் எடுத்து மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து 129/4 என்று இருந்தனர்.

  ஆனால் கடைசி 5 ஓவர்களில் வெறும் 35 ரன்களையே எடுக்க முடிந்தது, காரணம் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர் 29 ரன்கள் 2 விக்கெட், புவனேஷ்வர் குமார் 4 ஓவர் 28 ரன் 1 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர் 29 ரன் 2 விக்கெட் என்று முடக்கினர். இதனையடுத்து 164 ரன்கள் என்று முடக்கப்பட்டது, இந்தப் பிட்சில் இது போதாது. ஏனெனில் விளக்கொளியில் இந்தப் பிட்ச் பேட்டிங்குக்குச் சாதகமாக மாறிவிட்டது.

  ஆனால் இங்கிலாந்தும் கோலி கூறியதுபோல் ஷார்ட் பிட்ச் பந்துகளை அதிகம் வீசி சிக்கினர், மேலும் இஷாந்த் கிஷனின் அச்சமற்ற பேட்டிங் இங்கிலாந்தை கவிழ்த்தது. கோலியும் இஷான் கிஷனும் சேர்ந்து 10 ஓவர்களில் 94 ரன்களைச் சேர்த்தனர்.  இந்த அச்சமற்ற அதிரடியைத்தான் இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ‘பிறகு இறங்கி எங்களை இந்திய பேட்ஸ்மென்கள் நசுக்கினர், அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாதது ஏமாற்றமளிக்கிற்து’ என்றார்.

  இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஆட்டம் முடிந்து கூறியதாவது:

  10 ஓவர்கள் முடிவில் சரிசமமான நிலையில்தான் இருந்தோம். ஆட்டத்தில் இருந்தோம். ஆனால் ஒழுங்காகப் பந்து வீசியிருந்தால் வென்றிருக்கலாம். இந்தியா நன்றாக வீசினர். முதல் போட்டி பிட்சை விட இது வித்தியாசமானது. இதில் வேகம் இல்லை.

  ஆனால் இந்திய அணி  பேட்டிங்கில் தொடக்கத்திலிருந்தே எங்களை பிழிந்து எடுத்தனர். பின்னால் செல்ல வைத்தனர். இதை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியவில்லை, இதுதான் ஏமாற்றமளிக்கிறது. இந்தப் பிட்சில் 2வது போட்டியை ஆடியது உண்மையில் திருப்திதான். ஆனால் நாங்கள் ஆடிய விதம் ஏமாற்றமளித்தது.

  புள்ளி விவர ரீதியாக இங்கு விரட்டல் வெற்றி பெறும், ஏனெனில் பனிப்பொழிவு இருக்கும், ஆனால் நேற்று பனிப்பொழிவு இல்லை. இந்தியாவை பாராட்டுகிறேன்.

  ஜோஸ் பட்லர் எங்களுக்காக தொடகக்த்தில் இறங்கி 150 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 50 ரன்கள் பக்கம் சராசரி வைத்துள்ளார், ஒரு போட்டியை வைத்து அவரை எடைபோட முடியாது.

  ஜேசன் ராய் இப்படி ஆடினால் எதிரணிக்கு அச்சுறுத்தல்தான். மார்க் உட் இல்லாதது துரதிர்ஷ்டம். அடுத்த போட்டிக்கு திரும்புவார். அடுத்த போட்டி செம்மண் பிட்சில் நடக்கிறது. பந்துகள் திரும்பும், ஆனால் இத்தகைய சவால்களை வரவேற்கிறோம்.

  இவ்வாறு கூறினார் இயான் மோர்கன்.
  Published by:Muthukumar
  First published: