நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது.
உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதன் பின் இரு அணிகளும் மோதும் போட்டி இதுவாகும். இந்நிலையில் கேப்டன் விராட் கோலி ஆக்லாந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அரையிறுதி தோல்விக்கு அவர்களை பழிவாங்க முடியாது. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களுடன் சண்டைக்கு போக முடியாது. அவர்கள் மிகவும் அன்பானவர்கள். எளிதில் அனைவரிடமும் பழக கூடியவர்கள்.
Also Read : IPL 2020: எம்.எஸ்.தோனி முதல் சாய் கிஷோ் வரை... சி.எஸ்.கே வீரர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கு அவர்கள் நல்ல முன்மாதிரியாக இருப்பார்கள். அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது. அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற போது நாங்களும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஏனென்றால் எப்போது தோல்வியடைகிறமோ அப்போது தான் பெரிதாக பார்க்கப்படுவீர்கள்“ என்றார்.
Also Read : சேவாக் vs அக்தர்.. யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் & எப்படி?
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.