இங்கிலாந்தின் புதிய ஆக்ரோஷ பேட்டிங் முறையான பாஸ்பால் என்று செல்லமாக அழைக்கப்படும் முறைக்கு தென் ஆப்பிரிக்கா ஆப்பு வைத்து இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்துக்குப் பரிசாக அளித்தது.
பாஸ்பால் என்ற பேச்சு நியூசிலாந்தின் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்தின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு பேட்டிங் பிட்ச் ஆகப் போட்டு 4வது இன்னிங்ஸில் பெரிய பெரிய இலக்குகளை அனாயசமாக அதிரடி விரட்டல் செய்வது என்று நியூசிலாந்தை 3 டெஸ்ட்களிலும் இந்தியாவை பர்மிங்ஹாமிலும் 377 ரன்களை சேஸ் செய்து இதுதாண்டா பாஸ்பால் என்று சிலிர்ப்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் இது தோல்வியடையும் என்று அப்போதே எழுதப்பட்டது. அதுவும் இந்த அணுகுமுறையில் தோல்வியடையும் போது இங்கிலாந்து பேட்டர்கள் அசிங்கமாக அவுட் ஆகிகொண்டிருந்தனர் என்பதுதான் உண்மை. டாஸ் வென்று எதிரணியை முதலில் பேட் செய்ய அழைத்து 4வது இன்னிங்ஸில் சேஸ் செய்வது என்ற ஒரு புதிய அணுகுமுறையாக இங்கிலாந்து வரிந்து கொண்டதில் 4 டெஸ்ட்களில் வெற்றி கண்டது, இப்போது 4வது இன்னிங்ஸே தேவைப்படவில்லை என்பதுதான் தமாஷ்.
இதைத்தான் வாசிம் ஜாஃபர் கிண்டலடித்து, “பாஸ்பால் 4வது இன்னிங்சில் அதிசயங்களை நிகழ்த்தியது” என்று கூறும் போக்கைச் சுட்டிக்காட்டி, அதை கிண்டலடிக்குமாறு, தென் ஆப்பிரிக்கா கூறுவது போல்: “ஆனால் 4வது இன்னிங்ஸ் தேவைப்படவேயில்லையே” என்று கிண்டலடித்துள்ளார்:
"Bazball has done wonders in the fourth inns"
SA: There will be no fourth inns. #ENGvSA
— Wasim Jaffer (@WasimJaffer14) August 19, 2022
முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃபும் தன் பங்குக்கு, “உலகத்தரமான பவுலிங்குக்கு எதிராக பாஸ்பால் அணுகுமுறையெல்லாம் வேலைக்கு ஆகாது, அதே போல் ஒரு ஸ்மார்ட் கேப்டன் ஸ்மார்ட்டாக களவியூகம் அமைக்கும் போது எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.
South Africa shows that Bazball doesn't work against world class bowling attack with variety and a sharp captain who sets smart fields. #SAvsENG
— Mohammad Kaif (@MohammadKaif) August 19, 2022
தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தை 2வது இன்னிங்ஸில் 149 ரன்களுக்குச் சுருட்டி 12 ரன்களில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, South Africa, Test match