உலக டெஸ்ட் சாம்பியன் அணியான நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக சற்றும் எதிர்பாராமல் 3-0 என்று தோற்றது, மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் 277 ரன்களை இங்கிலாந்து விரட்டியது, அடுத்தடுத்த டெஸ்ட்களில் 299 மற்றும் 296 ரன்களை இங்கிலாந்து அதி ஆக்ரோஷமாக விரட்டி தொடரை 3-0 என்று கைப்பற்றியது.
கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை உலக டெஸ்ட் சாம்பியனாக உயர்த்த வழிநடத்தினார், இந்திய அணிக்கு தோல்வியைப் பரிசாக அளித்து அவர் டெஸ்ட் உலகக்கோப்பையை வென்றார், ஆனால் நியூசிலாந்தின் இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம், நியூசிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது கூட்டணியில் இதுவரை கண்டிராத டெஸ்ட் ஆக்ரோஷ அணுகுமுறை இங்கிலாந்து இப்போது உருவாகியுள்ளது.
இந்நிலையில் இதை கேன் வில்லியம்சனும் கண்டுணர்ந்துள்ளார், அவர் கூறும்போது, “பிரமாதமான டெஸ்ட் தொடர். 3 டெஸ்ட்களிலுமே எங்களுக்கும் வாய்ப்பிருந்தது, ஆனால் இங்கிலாந்துக்குப் பாராட்டுக்கள், இந்த டெஸ்ட்டிலும் நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம். நாங்கள் மீண்டும் ஒரு குழுவாக இணைய வேண்டும்.
இங்கிலாந்து அணியின் அணுகுமுறையில் புதிய கதை ஒன்று முளைத்துள்ளது. இந்த அணுகுமுறையில் சிறிய இடைவெளி பெரிய தூரங்களாக மாறியது. இதுதான் போட்டியின் முடிவை மாற்றிப் போட்டது. நிறைய வாய்ப்புகளை உருவாக்கப் பார்த்தோம் துரதிர்ஷ்டவசமாக முடியவில்லை.
எங்கள் டாப் 4 வீரர்கள் இன்னும் பங்களிப்பு செய்ய வேண்டும். அனைவருமே அணிக்கு நிறைய பங்களிப்பு செய்ய ஆர்வமுடன் இருக்கிறார்கள், இந்த அணியுடன் இருப்பது அருமையாக உள்ளது. இவர்களுடனும் இங்கிலாந்துக்கு எதிராக ஆடியதும் அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது” என்றார் கேன் வில்லியம்சன்.
உண்மையில் கேன் வில்லியம்சன் கூறும் இங்கிலாந்து ஆட்டத்தின் அணுகுமுறை மாற்றம் சிறுசிறு இடைவெளிகளையும் பெரும் தூரமாக மாற்றியுள்ளது என்று கூறுவது இந்திய அணிக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, இனி இங்கிலாந்தை எதிர்கொள்ளும் அனைத்து அணிகளுக்குமான எச்சரிக்கை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: England test, India Vs England, Kane Williamson, New Zealand