டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகும் விராட் கோலியின் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வரவேற்றுள்ளார். கேப்டன்சியின் அழுத்தம் ஒரு பேட்ஸ்மேனாக கோஹ்லியின் செயல்திறனை பாதிக்கலாம் என்று அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
கேப்டன் பதவியை ராஜினாமா செய்யும் கோலியின் பெரிய முடிவுக்கு பல உலக கிரிக்கெட் நட்சத்திரங்கள் பதிலளித்துள்ளனர், ஷாகித் அப்ரிடி இந்த நடவடிக்கையை வரவேற்றார் மற்றும் விராட் ஏன் டெஸ்டிலும் கேப்டன் பதவியை கைவிட்டார் என்பதற்கான அவர் தரப்பு காரணத்தையும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஷாகித் அஃப்ரிடி சேனல் ஒன்றில் கூறும்போது, “எனது கருத்துப்படி பரவாயில்லை. விராட் கோலி போதுமான அளவு கிரிக்கெட் விளையாடி அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார். இது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன். அழுத்தத்தை சமாளிக்க முடியாத போது அது அவரது பேட்டிங்கையும் பாதிக்கவே செய்யும். எனவே, அவர் நீண்ட காலமாக, சிறந்த கேப்டனாக இருந்துள்ளார் என்று நான் நினைக்கிறேன், ஒரு பேட்ஸ்மேனாக, அவர் தனது கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக ஆட வேண்டிய நேரம் இது” என்றார் அஃப்ரிடி.
விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை. பேட்டிங்கில் சராசரியிலும் சரி அல்லது ஐசிசி தரவரிசையிலும் சரி கோலி சமீபகாலமாக முன்பைப் போல் சிறப்பாக செயல்படவில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒரு தூய பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட வேண்டும் என்ற முடிவு பலராலும் வரவேற்கப்பட்டது.
இதையும் படிச்சுப்பாருங்க: Bhuvneshwar Kumar: புவனேஷ்வர் குமார் மட்டும் தென் ஆப்பிரிக்காவில் பிறந்திருந்தால்..
மைக்கேல் வான் ஷேன் வார்ன் போன்ற சிறந்த முன்னாள் வீரர்களாக இருந்தாலும் சரி அல்லது சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற இந்திய ஜாம்பவான்களாக இருந்தாலும் சரி, இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி செய்த பங்களிப்புகளுக்காக பல சிறந்த கிரிக்கெட் பண்டிதர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர். தற்போதைய அணி வீரர்கள் கூட கோலி பல ஆண்டுகளாக மேற்கொண்ட கேப்டன்சி செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.