Happy Birthday rahane: ரஹானேவின் இந்த ஆட்டங்களையெல்லாம் மறக்க முடியுமா?

கோப்புப் படம்

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 530 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்த போட்டியில் இந்தியாவின் விராத் கோலி, ரஹானே ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 465 ரன்களை இந்திய அணி எட்டியது

  • Share this:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் ரஹானேவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி டெல்லியில்     ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கி தனது டெஸ்ட் அத்தியாயத்தை தொடங்கிய அஜின்கியா ரஹானே, இன்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத விருட்சமாக வளர்ந்து நிற்கிறார். இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் ரஹானேவுக்கு இந்திய கேப்டன் விராத் கோலி, ஐசிசி, பிசிசிஐ என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்காக மறக்க முடியாக பங்களிப்பை ரஹானே வழங்கியுள்ள போதிலும் அவரது சிறந்த 5 டெஸ்ட் ஆட்டங்களை இங்கு பார்ப்போம்.

இங்கிலாந்துக்கு எதிராக 103 ரன்கள் எடுத்தது

கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில்  மற்ற இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, அந்த இன்னிங்ஸில் 103 ரன்களை எடுத்தார். அவரது பங்களிப்புடன் 28 ஆண்டுகளுக்கு பின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 147 ரன்கள் எடுத்தது

அதே 2014ம் ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 530 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்த போட்டியில் இந்தியாவின் விராத் கோலி, ரஹானே ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் 465 ரன்களை இந்திய அணி எட்டியது. இந்த ஆட்டத்தில் விராத் கோலி 169 ரன்களையும் ரஹானே 147 ரன்களையும் எடுத்தனர். ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

இதையும் படிங்க.. தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்: தயார் என கூறும் தினேஷ் கார்த்தி..

இலங்கைக்கு எதிராக 126 ரன்களை எடுத்தது

இந்திய அணி 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது கொழும்புவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் இந்திய அணி 393 ரன்களை எடுத்தது. இலங்கை அணி 306 ரன்களை எடுத்தது. இதையடுத்து 87 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரஹானே சிறப்பான பங்களிப்பை ரஹானே வழங்கினார். இந்த ஆட்டத்தில் அவர் குவித்த 126 ரன்களுடன் சேர்த்து இந்திய அணி 325 ரன்களை எடுத்தது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூசிலாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்தது

கடந்த 2016ம் ஆண்டு நியூஸிலாந்து அணி இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் விராத் கோலி, ரஹானே இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 557 ரன்களை எடுத்திருந்தது. இதில் விராத் கோலி 211 ரன்களும், ரஹானே 188 ரன்களும் எடுத்திருந்தனர். இருவரும் இணைந்து 365 ரன்கள் பார்ட்னர்ஷிப் அளித்தனர்.  இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 112 ரன்களை எடுத்தது

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியது. விராத்கோலி போட்டியில் இருந்து விலகியதால் 2வது டெஸ்ட் போட்டிக்கு ரஹானே தலைமை தாங்கினார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி ரஹானேவின் 112 ரன்களையும் சேர்த்து 326 ரன்களை எடுத்தது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: