விளையாட்டு

  • associate partner

'மெளனம் காதை துளைக்குது.. மாதவிலக்கு பற்றி பேசும் நேரம் இது..' - ராஜஸ்தான் ராயல்ஸ் ரொம்ப ஸ்பெஷல்., ஏன்?

தயக்கங்களை உடைத்து பெண்கள் வெளிவர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, இது மிக இயல்பான உயிரியல் செயல்பாடு என்பதை ஆண்களும் உணரவேண்டும்” என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை  செயலாக்க அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் தெரிவித்துள்ளார்.

'மெளனம் காதை துளைக்குது.. மாதவிலக்கு பற்றி பேசும் நேரம் இது..' - ராஜஸ்தான் ராயல்ஸ் ரொம்ப ஸ்பெஷல்., ஏன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
  • Share this:
’பேசாத மெளனம் காதை துளைக்குது. மாதவிலக்கு பற்றி பேசும் நேரம் இது’ என்ற டேக்லைனுடன் ட்விட்டரில், தனியார் சானிட்டரி நாப்கின் விளம்பரதாரர் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

கொரோனா ஊரடங்கில் அடைபட்டிருந்த பலரும், எந்த வித பாகுபாடுமின்றி எதிர்நோக்கியிருக்கும் பல விஷயங்களில் ஐ.பி.எல்லும் ஒன்று. சமூக, பொருளாதார, கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணையும் வெகு சில விஷயங்களில் முக்கியமானது கிரிக்கெட்.மேலும் படிக்க”5 மாதமாக பேட்டை கையில் எடுக்கவில்லை. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது” - விராட் கோலி

இந்த நூற்றாண்டிலும் பேசுவதற்கு தயக்கமாகவே தொடரும் மாதவிலக்கு தொடர்பான விஷயங்கள் மிக இயல்பானது என்று தெரிவிக்கும் வகையில், தனியார் சானிட்டரி நாப்கின் ப்ராண்ட்டின் ஸ்பான்ஷர்ஷிப் குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம்.

”ஐ.பி.எல்லுக்கு இருக்கும் வரவேற்பில் இந்த சமூக பொறுப்பான விஷயமும் இருக்கவேண்டுமென நினைத்தோம். மாதவிலக்கு என்னும் சாதாரணமான விஷயத்தை சுற்றி இருக்கும் தயக்கங்களை உடைத்து பெண்கள் வெளிவர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல, இது மிக இயல்பான உயிரியல் செயல்பாடு என்பதை ஆண்களும் உணரவேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இதைக்குறித்து மிகவும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். சமூக நோக்கமும் கலந்திருக்கும் இந்த விஷயத்தை சட்டைகளில் அணிவதை பெருமையாக கருதுகிறார்கள்” என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதன்மை  செயலாக்க அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் தெரிவித்துள்ளார்.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading