Home /News /sports /

‘ராக் ஸ்டார்’ என ஜடேஜாவுக்கு பெயரிட்ட ஷேன் வார்ன் - அவர் நினைவில் ஆல்ரவுண்ட் அற்புதம்

‘ராக் ஸ்டார்’ என ஜடேஜாவுக்கு பெயரிட்ட ஷேன் வார்ன் - அவர் நினைவில் ஆல்ரவுண்ட் அற்புதம்

ஷேன் வார்ன் - ஜடேஜா

ஷேன் வார்ன் - ஜடேஜா

மொஹாலி டெஸ்ட் ஒருவருக்கு சொந்தமானது, ஒருவருக்கு மட்டுமே. அது ராக் ஸ்டார் ஜடேஜவுக்கு மட்டுமேதான். ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு எதிரான தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி உறுதியான வெற்றியை பெற்றது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்த ஜடேஜா 175 ரன்களையும் விளாசி அந்த டவுனில் இந்தியா எதிர்பார்க்கும் ஆல்ரவுண்டராக எழுச்சி பெற்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...

    முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மொஹாலி டெஸ்ட் ஆட்டத்திற்காக, வெள்ளிக்கிழமை காலமான ஆஸி கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னை நினைவு கூர்ந்தார். ஏனெனில் ஜடேஜா ஒரு பிளேயராக வளர்ந்ததற்கு ஷேன் வார்னும் ஒரு காரணம்.

    தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான மாரடைப்பால் இறந்த வார்னே, ஜடேஜாவின் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் முக்கிய பங்கு வகித்தார், மேலும் அவருக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பெயரையும் வைத்தார். எனவே, அவரது மொஹாலி டெஸ்ட் புள்ளிவிவரங்கள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னுக்கு பொருத்தமான அஞ்சலியாகத் தோன்றியது.

    "ராக்ஸ்டார்' என வார்னி பெயரிட்டுள்ளதால், அவரது நினைவாக ஜடேஜா இந்த சாதனையான ஆல்ரவுண்ட் திறமையைக் காட்டியதாக மைக்கேல் வான் புகழ்ந்துள்ளார்.

    இதையும் படிங்க: Shane Warne: மெல்போர்ன் மைதானத்தில் அரசு மரியாதையுடன் ஷேன் வார்னின் இறுதிச் சடங்கு

    ஜடேஜாவின் 175 ரன், டெஸ்டில் 7வது இடத்தில் இறங்கும் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும், 1986 ஆம் ஆண்டு சிறந்த கபில் தேவின் சாதனையை முறியடித்தார். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஜடேஜா ஆறாவது கிரிக்கெட் வீரர் மற்றும் டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் ஆனார். அவர் இறுதியில் ஒன்பது விக்கெட்டுகளுடன் ஆட்டத்தை முடித்தார், ஒரு ஆட்டத்தில் 150-க்கும் அதிகமான ரன்கள் மற்றும் ஒன்பது விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற புதிய டெஸ்ட் சாதனையை படைத்தார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ravindra jadeja, Shane Warne

    அடுத்த செய்தி