Home /News /sports /

ஸ்டார் பவுலர் பிரசித் கிருஷ்ணா: செத்த பிட்சிலும் பந்தை குத்தி எழுப்பும் அசாத்திய திறமை

ஸ்டார் பவுலர் பிரசித் கிருஷ்ணா: செத்த பிட்சிலும் பந்தை குத்தி எழுப்பும் அசாத்திய திறமை

பிரசித் கிருஷ்ணா

பிரசித் கிருஷ்ணா

அகமதாபாத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்குப் பிறகு அடுத்த பவுலராக உருவெடுத்துள்ளார் 6 அடி 7 அங்குல உயரம் கொண்ட பிரசித் கிருஷ்ணா. 46-வது ஓவரை மெய்டன் விக்கெட்டாக அவர் வீசி எலைட் பவுலர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 9 ஓவர் 3 மெய்டன் 12 ரன்கள்தான் 4 விக்கெட்டுகள் என்று அசத்தினார் பிரசித் கிருஷ்ணா.

மேலும் படிக்கவும் ...

இவரது திறமை என்னவெனில் தன் உயரத்தின் மூலம் செத்த பிட்ச்களிலும் பந்தை அதன் தையலில் பட்டு குத்தி எழுப்புவதாகும். இதனால் குட் லெந்திலிருந்து பந்து எழும்பி அசவுகரியமாக வருவதால் பேட்டர்கள் திணறுகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் மணிக்கு 140 கிமீ வேகத்துக்கு மேல் சீரான முறையில் வீசுகிறார், நல்ல ஸ்லோயர் ஒன்களை வைத்திருக்கிறார், யார்க்கர்கள் கைவசம் உள்ளன. நேற்று அவர் ஏத்திய ஏத்தில் முதல் ஸ்பெல்லில் 4-2-3-2 என்று ஆக்ரோஷம் காட்டினார்.

நேற்று வீசிய முதல் ஸ்பெல்லில் அவர் ஃபுல் லெந்த்தில் வீசவில்லை பேக் ஆஃப் லெந்திலிருந்து குத்தி எழுப்பினார். மிடில் ஓவர்களில் இவர் வருங்காலங்களில் ஒரு சக்தியாக விளங்குவார். கர்நாடகாவின் தற்போதைய பவுலிங் கோச் எஸ்.அரவிந்த்திடம் பயிற்சி பெற்றவர். மணிக்கட்டு நிலையை இவரிடம் சரி செய்து கொண்டார், இதனால் பக்கவாட்டு ஸ்விங் பவுலிங்கை செழுமை படுத்திக் கொண்டார்.

ஷமி பும்ரா இல்லாத போட்டிகளில் இந்தியா மே.இ.தீவுகளுக்கு எதிராக 2029 உலகக்கோப்பைக்குப் பிறகே திணறியதை பார்த்து வருகிறோம், பவர் ப்ளே 10 ஓவர்களில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 24 போட்டிகளில் இந்திய பவுலர்களின் சராசரி 130.80 என்கிறது கிரிக் இன்போ புள்ளி விவரம் ஒன்று. புவனேஷ்வர் குமார் ஆரம்பத்தில் இருந்தது போல் இந்த காலக்கட்டத்தில் இல்லை. ஷமி, பும்ரா இந்தக் காலக்கட்டத்தில் 6 போட்டிகளில் மட்டுமே சேர்ந்து ஆடினர். எனவே பிரசித் கிருஷ்ணா இந்த இடத்தை நிரப்புகிறார்.

பவர் ப்ளேயில் 8 அல்லது 9 வது ஓவரில் தொடங்கி 4 ஓவர்களை வீசியும், பிறகு 20 ஓவர்களுக்கு மேல் ஒரு ஸ்பெல்லையும் பிறகுகடைசியில் ஒரு ஸ்பெல்லுமாக இவரை பயன்படுத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். ரோஹித் சர்மா இவரை நன்றாகப் பயன்படுத்துகிறார். பவுலிங் கோச் பராஸ் மாம்ப்ரே ‘பிசினஸ்னா பிசினஸ்’ டைப். அதனால் அவரது மேற்பார்வையின் கீழ் பிரசித் கிருஷ்ணா நமக்கு 3 வடிவத்துக்குமான ஒரு அபூர்வ பவுலராக வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
Published by:Muthukumar
First published:

Tags: India vs west indies

அடுத்த செய்தி