VIDEO | ரசிகர்கள் என்னை ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி!

The name #Thala is very special and I'm thankful to the fans: #MSDhoni | நேற்றைய போட்டியில் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. #ThalaDhoni

VIDEO | ரசிகர்கள் என்னை ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி!
எம்.எஸ்.தோனி. (BCCI)
  • News18
  • Last Updated: May 2, 2019, 1:03 PM IST
  • Share this:
டெல்லி போட்டி முடிந்த பிறகு, ரசிகர்கள் தன்னை ‘தல’ என்று பாசமாக அழைப்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய தோனி, 2 அட்டகாசமான ஸ்டம்பிங்களை செய்தார். இதனால், தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


Dhoni man of the match awards, CSK, IPL
ஆட்டநாயகன் விருது பெற்ற தோனி. (BCCI)


போட்டி முடிந்த பிறகு பரிசளிப்பு விழாவில் பேசிய தோனி, “தல என்ற பெயரை பெற்றது மிகவும் சிறப்பானது. இது மிகப்பெரிய செல்லப் பெயர். முன்னதாக எங்களது அணிக்காக தயார் செய்யப்பட்ட முதல் பாடலில் தல என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. அப்போது எனக்கு புரியவில்லை. ஓராண்டுக்குப்பிறகுதான் நான் அதை புரிந்துகொண்டேன்” என்று கூறினார்.

மேலும், “தமிழ்நாட்டில் நான் எங்கு சென்றாலும் என்னை தல என்றுதான் அழைக்கிறார்கள். நானும் அவர்களின் அன்பை புரிந்து கொண்டேன். அதேபோல், ரசிகர்கள் எனக்கு மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர்” என்று தோனி தெரிவித்தார்.


ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading