முகப்பு /செய்தி /விளையாட்டு / சேப்பாக்கத்தில் எம்.எஸ்.தோனி விளையாடும் கடைசி போட்டி இதுதானா? தீயாய் பரவும் தகவல்

சேப்பாக்கத்தில் எம்.எஸ்.தோனி விளையாடும் கடைசி போட்டி இதுதானா? தீயாய் பரவும் தகவல்

தோனி

தோனி

5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டி குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. சேப்பாக்கத்தில் ஃபேர்வெல் எனப்படும் வழியனுப்பு விழாவை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். 41 வயதாகும் தோனி சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 2008-இல் சென்னை அணி தொடங்கப்பட்டபோது அதன் கேப்டனாக தோனி பொறுப்புக்கு வந்தார். அவரை சென்னை அணி ஒவ்வொரு ஏலத்தின்போதும் தக்க வைத்துக் கொண்டது. அந்த வகையில் சி.எஸ்.கே. உடன் தோனி தனது 15 ஆவது ஆண்டை இந்தாண்டு நிறைவு செய்கிறார்.

மேலும், நடப்பு ஐபிஎல் தொடருடன் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மே 14-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டமே, சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதிபடுத்தப்படாத நிலையில் தோனியின் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்துள்ளார்கள். மே 14ஆம்தேதி போட்டிதான் சேப்பாக்கத்தில் தோனி விளையாடும் கடைசி போட்டியாக இருந்தால் அன்றைக்கு பிரமாண்ட அளவில் ஃபேர்வெல் எனப்படும் வழியனுப்பு விழாவை நடத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 2008, 2012, 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை அணி இறுதிப் போட்டியில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Cricket, IPL 2023