• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • AB de Villers| என் உயிர் இந்த மண்ணை விட்டு பிரியும் போதும் நான் பாதி இந்தியன்- ஏ.பி.டிவிலியர்ஸ் பிரியாவிடை உணர்ச்சிகரம்

AB de Villers| என் உயிர் இந்த மண்ணை விட்டு பிரியும் போதும் நான் பாதி இந்தியன்- ஏ.பி.டிவிலியர்ஸ் பிரியாவிடை உணர்ச்சிகரம்

கிரிக்கெட்டுக்குப் பிரியாவிடை- ஏ.பி.டிவில்லியர்ஸ்

கிரிக்கெட்டுக்குப் பிரியாவிடை- ஏ.பி.டிவில்லியர்ஸ்

  • Share this:
    தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர், இந்திய ரசிகர்களின் உள்ளங்களை அள்ளிய ஆர்சிபி வீரர், 360 டிகிரி ஜீனியஸ் பேட்டர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். ஓய்வு அறிவிக்கு முன் அவர் வெளியிட்ட உணர்ச்சிகரப் பதிவில் நான் இப்போது பாதி இந்தியன், பாதி தென் ஆப்பிரிக்கன் என்றார்.

    ‘டிவில்லியர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கலாம் ஆனால் அவர் எப்போதும் ஒரு ஆர்சிபியன்’ என்று பிரியாவிடை அளித்துள்ளார். ஏ.பி.டிவில்லியர்ஸ் தன் அறிவிப்பில் கூறியிருப்பது, “இன்று நான் பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். மிகவும் உணர்ச்சிகரமான அறிவிப்பு. அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் முடித்துக் கொள்கிறேன்.

    என் முகத்தில் புன்னகை அரும்பவே இதைக் கூறுகிறேன், ஏனெனில் நான் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன். ஆனால் ஆழமாக, என் இதயத்தில் நான் துயரப்படுகிறேன். என் மனதில் நிறைய எண்ணங்கள், உணர்ச்சிகள் பெருகுகின்றன. அனைத்தும் கடந்த மாதம் வெகுவிரைவில் முடிவானது. என் மனதிலும் கிரிக்கெட்டுக்கு பிரியாவிடை கொடுக்கும் எண்ணம் இருந்தது.

    பெங்களூருவில் உள்ள அனைத்து ரசிகர்கள், உலகம் முழுதும் உள்ள அனைத்து ரசிகர்கள்,, என்னை பின் பற்றியவர்கள், ஆர்சிபி அணியை ஆதரித்தவர்கள். அல்லது நான் பல ஆண்டுகளாக ஆடிய எந்த ஒரு அணியை ஆதரித்தவர்களும் சரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எங்கும் போக மாட்டேன், வாழ்நாள் முழுதும் ஆர்சிபியனாகவே இருப்பேன். ஆர்சிபி எனக்கு ஒரு இன்னொரு குடும்பம். வீரர்கள் வரலாம் போகலாம், ஆனால் ஆர்சிபி என்ற அணி அதன் ஸ்பிரிட் எப்போதும் இருக்கும்.

    ஏ.பி, டிவில்லியர்ஸ் டி20 உலகக்கோப்பையில் 717 ரன்கள்


    நிறைய ஆண்டுகள் ஆடிவிட்டோம், ஆனால் கோப்பயை வெல்லவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இன்னும் நிறைய வரும் என்று கூறுகிறேன். நானும் விராட் கோலியும் எதிர்காலத்துக்கான ஒரு பண்பாட்டை அணியில் வளர்த்துள்ளோம். ஆம், ஆர்சிபி என் வாழ்க்கையையே மாற்றியது. கடந்த சில ஆண்டுகளாக பாதி இந்தியனாகவே ஆகி விட்டேன். அதில் நான் பெருமையடைகிறேன்.

    அந்த அணியுடன் பயணித்த ஒவ்வொரு விநாடியையும் மகிழ்கிறேன். இந்தியா மீது காதல் கொண்டு விட்டேன். அது மாறப்போவதில்லை, இந்த பூமியில் நான் உயிரோடு இல்லாத போகும் தருணத்தில் நான் ஒரு பாதி இந்தியன், பாதி தென் ஆப்பிரிக்கனே” என்று உணர்ச்சிகரமாக்ப் பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,765 ரன்கள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 9,577 ரன்கள், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 1672 ரன்கள். அனைத்து டி20க்களில் 9,424 ரன்கள். மொத்தம் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் 58 சதங்கள். 2,700க்கும் மேற்பட்ட பவுண்டரிகள். 436 சிக்சர்கள் என்று பிரம்மாண்ட பேட்ஸ்மெனாகத் திகழ்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டுக்கே மொத்தமாக பிரியாவிடை கொடுத்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: