இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் மனநல பயிற்சியாளரான பேடி உப்டன் ‘தி பேர் ஃபுட் கோச்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்திய அணியினருடனான தன்னுடைய பயணங்கள், 2011 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் செயல்பாடுகள் என பல சுவாரஸ்யமான தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. ராகுல் டிராவிட்டில் இருந்து கம்பீர் வரை இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 2011-ல் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கையில் ஏந்தியது. இந்த தொடரில் போட்டிக்கு முன்பாக வீரர்கள் உடலுறுவு கொண்டதாக உப்டன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2009 - 2011 வரை அந்தப்பொறுப்பில் இருந்தார். அவரது டீமில் மனநல பயிற்சியாளராக பேடி உப்டன் இருந்துள்ளார். இந்த தி பேர் ஃபுட் கோச் புத்தகம் மூலம் பேடி வெளிச்சத்துக்கு வந்துள்ளார். இந்த புத்தகத்தில், ‘ 2009-ல் அணில் கும்ப்ளே டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோது நான் அணியில் இணைந்தேன். அப்போது தோனி ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்தார். பயிற்சி மற்றும் மீட்டிங்க்கு வீரர்கள் சரியான நேரத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினோம். வீரர்களும் அதற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.
பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு ரூ10000 அபராதம் விதிக்க வேண்டும் என கும்பளே பரிந்துரை செய்தபோது தோனியோ இன்னும் பெரிய தண்டனையை பரிந்துரைத்தார். ஒரு வீரர் தாமதமாக வந்தால் மற்ற வீரர்கள் தலா 10000 அபராதம் செலுத்த வேண்டும் என்றார். அணியில் யாரும் தாமதமாக வரவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகக்கோப்பை போட்டிக்கு முன்னர் வீரர்களை உடலுறவு வைத்துக்கொள்ள கேட்டுக்கொண்டதாகவும் இது அவர்களின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக்கும் என்பதால் அறிவுறுத்தப்பட்டதாக புத்தகத்தில் கூறியுள்ளார். அதற்கு தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் முதலில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பின்னர் அவர் அதனை புரிந்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு உடலுறவு குறித்த ஆலோசனைகள் வழங்கியதாகவும். இதனால் அவர்களால் போட்டிகளில் எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என்பது குறித்த குறிப்புகள் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Dhoni, India Cricket, Sachin tendulkar