Home /News /sports /

Ashes, AUS vs ENG:கடைசி பந்து வரை திக் திக்..- சிட்னி டெஸ்ட்டை நூலிழையில் டிரா செய்த இங்கிலாந்து- ஒயிட்வாஷ் தவிர்ப்பு

Ashes, AUS vs ENG:கடைசி பந்து வரை திக் திக்..- சிட்னி டெஸ்ட்டை நூலிழையில் டிரா செய்த இங்கிலாந்து- ஒயிட்வாஷ் தவிர்ப்பு

ட்ரா செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராட்

ட்ரா செய்த மகிழ்ச்சியில் இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராட்

ஆஷஸ் தொடர் 2021-22-ன் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் டிராவில் இன்று முடிவடைந்தது. மழையால் பாதிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்ட 5ம் நாள் ஆட்டத்தில் கடைசி பந்து வரை திக் திக் த்ரில் தொடர்ந்தது, ஆனால் கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்மித் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை தடுத்தாட கிரேட் ட்ரா என்று சோல்ல முடியாது, ஆனால் எப்படியோ டிரா ஆக ஆஸ்திரேலியா 3-0 முன்னிலையைத் தக்கவைத்தது.

மேலும் படிக்கவும் ...
  ஆஷஸ் தொடர் 2021-22-ன் 4வது டெஸ்ட் போட்டி சிட்னியில் டிராவில் இன்று முடிவடைந்தது. மழையால் பாதிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்ட 5ம் நாள் ஆட்டத்தில் கடைசி பந்து வரை திக் திக் த்ரில் தொடர்ந்தது, ஆனால் கடைசியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்மித் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தை தடுத்தாட கிரேட் ட்ரா என்று சோல்ல முடியாது, ஆனால் எப்படியோ டிரா ஆக ஆஸ்திரேலியா 3-0 முன்னிலையைத் தக்கவைத்தது.

  30/0 என்று இறங்கிய இங்கிலாந்து இன்று 102 ஓவர்கள் தாக்குப் பிடித்து 270/9 என்று முடிந்தது. பிராட் ஒரு முனையில் 35 பந்துகள் சந்தித்து 8 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

  கடைசியில் பாட் கமின்ஸ், பிராட், லீச், ஆண்டர்சன் மட்டைக்கு அடியில்தான் பீல்டரை நிறுத்தவில்லை, மற்றபடி அத்தனை பேரும் மட்டையைச் சுற்றி நிற்கவைக்கப்பட்டனர்.

  மட்டையைச் சுற்றி இத்தனை பீல்டர்களா?


  100வது ஓவரை பல விவாதங்களுக்குப் பிறகு வைஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புடுங்கி வீச 5 பந்து சாதாரணமாக இருந்தது, ஆடிவிட்டார் ஜாக் லீச் (26), ஆனால் கடைசி பந்து லெக் ஸ்பின் ஆகாமல் நேராகச் செல்ல ஜாக் லீச் தடுத்தாட முயல எட்ஜ் ஆகி வார்னர் கையில் உட்கார்ந்தது. ஒரே கொண்டாட்டம் 2 ஓவர்கள் மீதமிருக்கையில் ஸ்மித் பிரேக் த்ரூ கொடுக்க இங்கிலாந்து 270/9 என்று இருந்தது.

  அடுத்த ஓவரை நேதன் லயன் வீச அவருக்கு பிட்சில் ஒன்றுமில்லை, பந்து திரும்பவும் இல்லை, பிராட் மிகவும் திக் திக் கணங்களில் சிறப்பாகத் தடுத்தாடினார். இதனையடுத்து கடைசி ஓவர் வந்தது, மீண்டும் ஸ்மித் தன் லெக் ஸ்பின்னுக்காக வந்தார், அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கினர், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்த வயதில் இத்தனை டென்ஷன் தேவையா?பாவம்! ஆனால் ஸ்மித்தால் கடைசி விக்கெட்டை உடைக்க முடியவில்லை. ஒயிட் வாஷ் தவிர்க்க ப்பட்டது.

  14 டெஸ்ட்களில் இங்கிலாந்து 2வது முறையாக தோல்வியை தவிர்த்தது இங்கிலாந்து. தொடக்க வீரர் ஜாக் கிராலி அருமையான கவர் ட்ரைவ், நேர் டிரைவ், ஆன் டிரைவ், இடி போல் இறங்கும் புல் ஷாட்கள் மூலம் 100 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து ஓப்பனர் ஒருவர் இந்த தொடரில் அடிக்கும் முதல் அரைசதம் என்ற ஒரு அரிய சாதனையை நிகழ்த்தினார் க்ராலி.  பட்லர் காயம், நாடு திரும்புகிறார், சாம் பில்லிங்ஸ் அணியில்:

  ஜாஸ் பட்லர் விரல் காயம் சீரியஸ் ஆனதால்தான் ஆலி போப் கீப் செய்தார், ஆனால் ஆலிபோப் பேட் செய்ய முடியாது. அதனால் 15ம் தேதி தொடங்கும் ஹோபார்ட் பிங்க் பந்து பகலிரவு ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் இருக்க மாட்டார் அவருக்குப் பதில் சாம் பில்லிங்ஸ் வருகிறார்.

  கடைசி டெஸ்ட் போட்டிக்கு ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவும் சந்தேகம் மார்க் உட், இன்று கமின்ஸ் ரிவர்ஸ் ஸ்விங் பயங்கர யார்க்கரை பாதத்தில் வாங்கி எல்.பி.ஆகி வெளியேறினார். இவரும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு சந்தேகம்தான். ஜாக் கிராலியை அடுத்து பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ முதல் இன்னிங்ஸ் போல் 2வது இன்னிங்சிலும் கூட்டணி அமைத்ததால் இங்கிலாந்து 5-0 ஒயிட் வாஷை இப்போது தவிர்த்துள்ளது. இங்கிலாந்து இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் 2006-07 மற்றும் 2013-14-ல் 5-0 என்று ஒயிட்வாஷ் வாங்கியது.

  ஸ்டோக்ஸ் இந்த டெஸ்ட்டின் 2வது அரைசதத்தை எடுத்து நேதன் லயன் பந்தை தொட்டார் கெட்டார், எட்ஜ் ஆனது. பேர்ஸ்டோ இந்த ஆஷஸில்ல் சதமெடுத்த ஒரே இங்கிலாந்து வீரர், கமின்ஸ் ஏத்திய ஏத்தில் கட்டை விரல் பெயர்ந்தது. ஜானி பேர்ஸ்டோ 41 ரன்களில் மெல்போர்ன் ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்திரேலிய பூர்வக்குடி பவுலரான போலண்ட் வீசிய அருமையான இன்ஸ்விங்கரில் மட்டையில் பட்டு பேடில் பட்டு சிலி மிட் ஆஃபில் கேட்ச் ஆனது, வேகப்பந்து வீச்சாளருக்கு சிலி மிட் ஆஃப் பொதுவாக டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில்தான் வைக்கப்படும் ஆனால் பாட் கமின்ஸின் அபார உத்தி கைகொடுத்தது. ஜாஸ் பட்லர். 38 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து கமின்ஸ் பந்தில் எல்.பி.ஆனார்.  நடுவர் ரெய்ஃபல் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் ஆனது. கமின்சின் அதே ஓவரில்தான் மார்க் உட் பயங்கர ஷோயப் அக்தர் டெலிவரியில் பாதம் பெயர்ந்து எல்.பி.ஆனார்.193/5 என்று இருந்த இங்கிலாந்து 237/8 என்று சரிந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கனியை ஜாக் லீச், பிராட், ஆண்டர்சன் பறித்து வீசி எறிந்தனர்.

  அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றால் 2011-க்குப்பிறகு முதல் வெற்றியை ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்கும். இன்று காலை கிராலி அருமையாக ஆடினார் 13 பவுண்டரிகளை விளாசினார். ஹசீப் ஹமீத் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது, அவர் ஸ்காட் போலண்ட் (3/30) பந்தை ஸ்னிக் செய்து அவுட் ஆனார். 8 இன்னிங்ஸ்களில் ஹசீப் ஹமீதின் சராசரி 10 ஆகும். டேவிட் மலான் 29 பந்தில் 4 ரன்கள் எடுத்து கட் ஷாட் ஆடுகிறேன் என்று லயனின் நேர் பந்தில் பவுல்டு ஆனார்.

  க்ராலி அருமையாக ஆடி வந்த நேரத்தில் கேமரூன் கிரீனின் யார்க்கரில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஜோ ரூட், (85 பந்தில் 24), பென் ஸ்டோக்ஸ் நின்றனர். 96/3லிருந்து ஸ்கோரை ஸ்டெடி செய்தனர். 4வது விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர். இடையில் மழை பெய்து 7 ஓவர்களை சாப்பிட்டது. ரூட் தேநீர் இடைவேளையை கடக்க முடியவில்லை. இந்த தொடரில் 8வது முறையாக ஸ்டம்புக்கு பின்னால் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியுள்ளார். போலண்ட் தான் மீண்டும் முக்கிய விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.

  ஆஸ்திரேலியாவில் கமின்ஸ், லயன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்காட் போலண்ட் 24 ஓவர் 11 மெய்டன் 30 ரன் 3 விக்கெட். ஆட்ட நாயகன் உஸ்மான் கவாஜா. இங்கிலாந்து தோல்வியை தவிர்த்தது. ஆஸ்திரேலியாவின் 5-0 ஒயிட்வாஷ் கனவில் மண்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Ashes 2021-22, Australia vs England, Sydney

  அடுத்த செய்தி