Home /News /sports /

Ashes 1st test: நல்ல பேட்டிங் பிட்ச் ஆக மாறிய பிரிஸ்பன்: ஜோ ரூட், மலான் அபாரம்- இங்கிலாந்து பதிலடி

Ashes 1st test: நல்ல பேட்டிங் பிட்ச் ஆக மாறிய பிரிஸ்பன்: ஜோ ரூட், மலான் அபாரம்- இங்கிலாந்து பதிலடி

ஜோ ரூட்-டேவிட் மலான் மிகப்பெரிய கூட்டணி

ஜோ ரூட்-டேவிட் மலான் மிகப்பெரிய கூட்டணி

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 425 ரன்கள் குவித்து 278 ரன்கள் முன்னிலை வகிக்க தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 220/2 என்று வலுவாக 3ம் நாளை முடித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெறும் ஆஷஸ் தொடர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 425 ரன்கள் குவித்து 278 ரன்கள் முன்னிலை வகிக்க தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 220/2 என்று வலுவாக 3ம் நாளை முடித்துள்ளது.

  இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இன்னும் 59 ரன்களே தேவை எனும் நிலையில் டேவிட் மலான் 80 ரன்களுடனும், ஜோ ரூட் 86 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த மைக்கேல் வானின் சாதனையை ஜோ ரூட் கடந்தார். டேவிட் மலான், ஜோ ரூட் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

  கடினமான சூழ்நிலை, ஆனால் பிட்ச் கொஞ்சம் பேட்டிங்குக்குச் சாதகமாக மாறியது, டேவிட் மலான், ஜோ ரூட் பிட்சின் மாற்றத்தை புரிந்து கொண்டு பாசிட்டிவ் ஆக ஆடினர். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி டெஸ்ட்டை வென்று தொடரையும் வென்றது. இங்கிலாந்தின் மலான், ஜோ ரூட் முழுதும் இந்தப் பேட்டிங் பிட்சைப் பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க வேண்டும், இங்கிலாந்து வெல்வது இயலாது ஆனால் விக்கெட்டுக்காக ஆஸ்திரேலியாவை வியர்வை சிந்த வைக்க முடியும்.

  ஒரு லீட் எடுத்து மீண்டும் அவர்களை கொஞ்சம் ஆட்டிப்பார்க்க முடியும். நாளை காலை புதிய பந்து எடுத்தவுடன் என்ன ஆகும் என்று சொல்ல முடியாது, ஆனால் பிட்சில் ஒன்றுமில்லை, ஃபிளாட் பிட்ச் ஆகிவிட்டது. 86 ரன்களில் இருக்கும் ஜோ ரூட், சதம் எடுத்தால் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் எடுப்பார்.

  டிராவிஸ் ஹெட் 152 ரன்கள்- 148 பந்துகள்


  உணவு இடைவேளைக்கு முன்பாக ட்ராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாச ஆஸ்திரேலியா 425 ரன்கள் எடுத்தது, உணவு இடைவேளைக்கு முன்னர் சோதிக்கும் 8 ஓவர்களை இங்கிலாந்தின் ரோரி பர்ன்சும், ஹசீப் ஹமீதும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்த முறை ரோரி பர்ன்ஸ் பயந்து போய் ரன்னர் முனையில் இறங்கினார், ஹசீப் ஹமீதுதான்முதல் பந்தை எதிர்கொண்டார். அப்படியும் கடைசி பந்தை எதிர்கொண்ட ரோரி பர்ன்ஸ் எல்.பி.ஆனார், நடுவரும் கையை உயர்த்தி விட்டார், ஆனால் ரிவியூவில் பந்து மேலே செல்வது தெரிந்ததால் தப்பினார்.

  ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை, காரணம் பாட் கமின்ஸ் ஒரு ஏத்து ஏத்த எட்ஜ் ஆகி வெளியேறினார் ரொரி பர்ன்ஸ். ஹசீப் ஹமீது திடமாகவே ஆடினார், ஆனால் மீண்டும் தான் ஒரு 25 ஸ்கோர் வீரர் என்பதை நிரூபிக்கும் விதமாக 27 ரன்களில் ஸ்டார்க்கிடம் லெக் சைடு எட்ஜில் காலியானார்.

  இதையும் படிங்க: நான் பயிற்சியாளராகக் கூடாது என்று பிசிசிஐ-யில் சிலர் விரும்பினர்- ரவி சாஸ்திரி பரபரப்பு பேட்டி

  ஜோ ரூட்டிற்கும் இரண்டாவது டக் அடிக்கும் ஆபத்து இருந்தது, ஆனால் பிட்சில் ஒன்றுமில்லை அழகாக செட்டில் ஆகி அருமையான ஸ்ட்ரோக்குகளை அடித்தார். டேவிட் மலான் ஆஃப் திசையில் கவர் ட்ரைவ்களாக ஆடித்தள்ளினார், நேதன் லயனுக்கு எதிராக கட் ஷாட்களை அருமையாகப் பயன்படுத்தினார், ஜோ ரூட் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப்பெல்லாம் ஆடத் தொடங்கிவிட்டார். லயன் எவ்வளவோ முயன்றும் இன்று 400வது டெஸ்ட் விக்கெட் அவருக்குக் கிடைக்கவில்லை. ஜோ ரூட் தன் 51வது அரைசதத்தை 80 பந்துகளில் எடுத்தார். ஸ்வீப் பவுண்டரிதான் 50 ரன்னை எட்டிய ஷாட்.

  டேவிட் மலான் தன்8வது அரைசதத்தை 121 பந்துகளில் எட்டினார். கேமரூன் கிரீன் வீசினார், மார்னஸ் லபுஷேன் தான் மறந்து போன லெக்ஸ்பின்னை வீசினார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஜோஷ் ஹேசில்வுட் வீசாதது ஆச்சரியமே. கமின்ஸ் பந்தில் மலான் புல் ஷாட் ஆட அது மார்கஸ் ஹாரிஸ் கைக்குச் செல்லாமல் முன்னாலேயே விழுந்த ஒரே தருணம்தான் இங்கிலாந்துக்கு பக் பக். மற்றபடி ரூட், மலான் பிரமாதமாக ஆடிவருகின்றனர், இங்கிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 220/2 என்று உள்ளது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Ashes 2021-22, Australia vs England, Joe Root

  அடுத்த செய்தி