தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்ததால் விராட் கோலி கேப்டன்சியை உதறியதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது என்றாலும் கேப்டன்சியை உதறினார், ஆனால் ஆஷஸ் தொடரில் தொடர் தோல்விகளைச் சந்தித்தும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் , கேப்டன்சியை விட்டு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “இந்த அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நான் தான் சரியான நபர் என நான் நம்புகிறேன். அனைத்தையும் தலைகீழாக்கவும், தோல்வியிலிருந்து வெற்றிப்பாதைக்குத் திருப்பவும் எனக்கு ஆசை இருக்கிறது. அந்த முடிவு என் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டாலும், அப்படியே ஆகட்டும்” என்றார் ஜோ ரூட். ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
ஞாயிற்றுக்கிழமை ஹோபார்ட்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வி கண்டு தனது கடைசி 14 டெஸ்ட் போட்டிகளில் 10வது தோல்வியை கண்டது.2017/18 இல் இங்கிலாந்து 4-0 என ஆஷஸ் தொடரை இழந்தபோது ரூட் கேப்டனாக இருந்தார், மேலும் 2019 இல் சொந்த மண்ணில் ரூட் கேப்டன்சியில்தான் 2-2 என டிரா ஆனது.
ஜோ ரூட் மொத்தம் 61 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சியில் இருந்துள்ளார், இதில் 27 வெற்றி, 25 தோல்விகள். டிரா ஆன போட்டிகள் 9.
இந்நிலையில் ஜோ ரூட் மேலும் கூறும்போது, “இந்த நிமிடத்தில் நாங்கள் ஒரு அணியாக உண்மையான கடினமான கட்டத்தில் இருக்கிறோம் அணியின் செயல்திறன் போதுமானதாக இல்லை.ஆனால் விஷயங்களை மாற்ற முயற்சிக்கும் வாய்ப்பை நான் பெற விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட தோல்விகள் ஏமாற்றமளிக்கிறது. மீண்டும் இது போன்று நடந்தால் அதை ஜீரணிப்பது கடினம். மேம்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்வது பற்றி தெளிவாக இருக்கிறோம்.
கண்டிப்பாக மாற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இதன் பின்னணியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உண்மையில் முன்னுரிமை அளிப்பதற்கும், விளையாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், இந்த அணிக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அது சரியான நேரத்தில் நடக்கும் என்று நம்புவோம். சில நீண்ட கால விஷயங்கள் மற்றும் குறுகிய கால விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. "தோல்வி குறித்த எனது கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவேன் என்று நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். வரும் வாரங்களில் விஷயங்கள் எவ்வாறு முன்னேறும் என்பதைப் பார்ப்போம்.
வீரர்கள் நிச்சயம் கண்ணாடியில் தங்களைப் பார்த்து, அணியில் தேர்வு செய்யப்பட்டதை நியாயப்படுத்தவில்லை என்றே தங்கள் ஆட்டம் பற்றிக் கருதுவார்கள். எங்கள் திறன் என்ன என்பதை நாங்கள் சரியாகக் காட்டவில்லை, நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டோம். அதே நேரத்தில், ஆஸ்திரேலியா, இந்த நேரத்தில், எல்லாவற்றிலும் எங்களை விட சிறந்த அணியாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதைச் சொல்வது எனக்கு வலிக்கிறது, ஆனால் இது தான் உண்மை. நாம் அதை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவதற்கானவழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.” என்றார் ஜோ ரூட்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.