முகப்பு /செய்தி /விளையாட்டு / Ashes - 1890-க்குப் பிறகு இங்கிலாந்தின் மோசமான தோல்வி- 56 ரன்களுக்கு 10 விக். -ஆஸ்திரேலியா 4-0 வெற்றி

Ashes - 1890-க்குப் பிறகு இங்கிலாந்தின் மோசமான தோல்வி- 56 ரன்களுக்கு 10 விக். -ஆஸ்திரேலியா 4-0 வெற்றி

ஆஷஸ் வெற்றி கோப்பையுடன் பாட் கமின்ஸின் ஆஸி. படை

ஆஷஸ் வெற்றி கோப்பையுடன் பாட் கமின்ஸின் ஆஸி. படை

ஆஷஸ் தொடர் 2021-22-ன் கடைசி டெஸ்ட் ஹோபார்ட்டில் நேற்று 3ம் நாளிலேயே முடிந்து போனது, 271 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து படுமோசமாக ஆடியது. அதுவும் 68/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 56 ன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க ஆஸ்திரேலியா 4-0 என்று தொடரை கைப்பற்றியது. கமின்ஸ் கேப்டன்சி மிளிர ஜோ ரூட் கேப்டன்சி விளக்கொளியிலும் அழுது வடிந்தது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

ஆஷஸ் தொடர் 2021-22-ன் கடைசி டெஸ்ட் ஹோபார்ட்டில் நேற்று 3ம் நாளிலேயே முடிந்து போனது, 271 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து படுமோசமாக ஆடியது. அதுவும் 68/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 56 ன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க ஆஸ்திரேலியா 4-0 என்று தொடரை கைப்பற்றியது. கமின்ஸ் கேப்டன்சி மிளிர ஜோ ரூட் கேப்டன்சி விளக்கொளியிலும் அழுது வடிந்தது.

ஹோபார்ட் டெஸ்ட் சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலியா 303- ட்ராவிஸ் ஹெட் 101, கிரீன் 74, பிராட் 3/59, மார்க் உட் 3/115. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 188 ஆல் அவுட் , கமின்ஸ் 4 விக், ஸ்டார்க் 3 விக்கெட், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ் 155 ஆல் அவுட், அலெக்ஸ் கேரி 49, மார்க் உட் 37/6. இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ் 124 ஆல் அவுட். பாட் கமின்ஸ், கேமரூன் கிரீன், ஸ்காட் போலண்ட் தலா 3 விக்கெட்டுகள். ஆட்ட நாயகன் தொடர் நாயகன் இரண்டுமே ட்ராவிஸ் ஹெட் தான்.

இங்கிலாந்தின் வெற்றிக்கனவுக்கு ஆப்பு வைத்துத் தொடங்கியவர் கேமரூன் கிரீன் தான் அவர் இங்கிலாந்தின் டாப் 3-யைக் கழற்றினார். பிறகு பூர்வக்குடி இன பவுலர் ஸ்காட் போலண்ட், பாட் கமின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை சவப்பெட்டிக்குள் போட்டு ஆணியடித்தனர்.

முன்னதாக முதல் இன்னிங்சில் கண்டபடி அடி வாங்கிய மார்க் உட் மார்க் வுட் தனது முதல் ஆஷஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி 6-37 என்று இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பை அளித்தார்.

ஆஸ்திரேலியா 37-3 ரன்களில் தொடங்கிய போது 7 விக்கெட்டுகள் தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து தொடங்கியது, நான்காவது ஓவரில், நைட்வாட்ச்மேன் போலண்ட் (8) விக்கெட்டை வீழ்த்தி தொடங்கினார். மார்க் உட் ஷார்ட் பிட்ச் பந்து உத்தியைக் கையாண்டு ட்ராவிஸ் ஹெட் (8), ஸ்டீவ் ஸ்மித் (23) ஆகியோரை வீழ்த்தினார். அதன் பிறகு அலெக்ஸ் கேரி, கிரீன் சேர்ந்து 49 ரன்களைச் சேர்த்தனர். அலெக்ஸ் கேரி ஒருமுறை வோக்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். ஆனால் அது நோ-பால் ஆனது.

கிரீன் (23) விக்கெட்டை பிராட் வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க்கை உட் வீழ்த்தினார். அலெக்ஸ் கேரி ஸ்டூவர்ட் பிராட் பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உட் கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலியா 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து கொலாப்ஸ்:

இங்கிலாந்து நன்றாகத் தொடங்கியது 68 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி 271 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்ட போது ரோரி பர்ன்ஸ், கிரீன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து எழும்பியதில் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு வெளியேற கொலாப்ஸ் தொடங்கியது. டேவிட் மலானும் (10) பந்தை வங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். பிறகு கிராலி (36) கிரீன் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். 68/0லிருந்து இங்கிலாந்து 83/3 என்று ஆனது.

பென் ஸ்டோக்ஸ் ஸ்டார்க்கின் பவுன்சரை நேராக குறிபார்த்து லயன் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஜோ ரூட், போலண்டின் தாழ்வான பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். மட்டைக்குக் கீழ் சென்றதால் ரூட் 11 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார். சாம் பிலிங்ஸ் (1), போலண்ட் பந்தை மிட் ஆனில் கேட்ச் கொடுத்தார். கமின்ஸின் அருமையான பந்தில் ஆலி போப் பவுல்டு ஆனார். போலண்ட் பந்தை வோக்ஸ் எட்ஜ் செய்தார். பிறகு கமின்ஸ் வந்தார் மார்க் உட், ஆலி ராபின்சனை பெவிலியனுக்கு அனுப்பி வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

top videos

    ஆஸ்திரேலியாவில் 15 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இங்கிலாந்து வெற்றியை ருசிக்கவில்லை. ஜோ ரூட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வாங்கும் 10வது டெஸ்ட் உதை இது.

    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England