ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ashses series 2021-22| இங்கிலாந்து அணிக்குள் பிளவு: ரூட்- ஆண்டர்சன் மோதல்

Ashses series 2021-22| இங்கிலாந்து அணிக்குள் பிளவு: ரூட்- ஆண்டர்சன் மோதல்

ஆண்டர்சன் - ரூட்

ஆண்டர்சன் - ரூட்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆஷஸ் தொடர் 2021-22 டெஸ்ட் சீரியஸில் ஆஸ்திரேலியாவிடம் பிரிஸ்பன், அடிலெய்ட் டெஸ்ட்களில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது, கேப்டன் ஜோ ரூட், ஆண்டர்சன் இருவரும் ஒருவர் கருத்தை ஒருவர் மறுத்து பொதுவெளியில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு பவுலர்கள் செய்த தவறையே செய்கின்றனர், சரியாக வீசவில்லை என்று ஜோ ரூட் பொதுவெளியில் கூற தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன், பொதுவெளியில் வந்து மட்டையான அடிலெய்ட் பிட்சில் பேட்ஸ்மென்கள்தான் சொதப்பினர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

ஆட்டம் முடிந்தவுடன் ஜோ ரூட் மீடியாவிடம் கூறும்போது, முதல் இன்னிங்ஸில் முதல் நாளில் சரியாகவே வீசவில்லை, பவுலர்கள் ஷார்ட் பிட்ச் ஆக வீசித்தள்ளினர், பேட்டர்களை ஆடவிடவில்லை, 2வது இன்னிங்ஸில் சரியான லெந்தில் வீசினாலும் அதற்குள் மேட்சே முடிந்து விட்டது என்ற ரீதியில் அவர் கருத்துக் கூற ஆண்டர்சன் பதிலளித்துள்ளார்.

டெலிகிராப் பத்திரிகையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் எழுதிய பத்தியில் கூறும்போது, “அடிலெய்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஃபிளாட் பிட்ச் தயாரிக்கப்பட்டது என்றே தரவுகள் கூறுகின்றன, ஆனாஅல் பேட்டர்கள் நன்றாக ஆடவில்லை. பொதுவாக பிங்க் பந்து நிறைய ஸ்விங் ஆகும் ஆனால் இந்த முறை இரவில் கூட ஸ்விங் ஆகவில்லை. எங்கள் பேட்ஸ்மென்கள் போதிய அளவுக்கு நன்றாக ஆடவில்லை.

நாங்கள், பவுலர்கள் வாய்ப்புகளைத்தான் உருவாக்க முடியும் அதை சரியாகப் பயன்படுத்த வேண்டும், கேட்ச்கள் சில தவற விடப்பட்டன. சரியான இடத்தில் வீச வேண்டும், முதல் 2 நாட்கள் நன்றாகத்தான் வீசினோம். கொஞ்சம் இன்னும் ஃபுல் லெந்தில் வீசியிருக்கலாம். இருப்பினும் சில வாய்ப்புகளை உருவாக்கினோம் கேட்ச்களை பிடிக்கவில்லை.

ஆட்டத்தின் போது கணிப்பில் சிறப்பாக இருக்க வேண்டும். ஆட்டத்தின் போக்கில் போய்க்கொண்டிருக்கக் கூடாது. ஃபுல் லெந்தில் வீசியிருக்க வேண்டும். ஒரு அணியாக இதனை முடிவெடுத்திருக்க வேண்டும்” என்று ஜோ ரூட் மீது சூசகமான தாக்குதலை தொடுத்தார்.

Also Read: கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

First published:

Tags: Ashes 2021-22, Australia vs England, James anderson, Joe Root