சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் 2021-22-ன் 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று உஸ்மான் கவாஜா அதியற்புத சதம் ஒன்றை எடுக்க ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ரன்கள் என்று டிக்ளேர் செய்தது, அதுவும் நேதன் லயன், ஸ்டூவர்ட் பிராட் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பியவுடன் ஆஸ்திரேலியா கேப்டன் டிக்ளேர் செய்தார். இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 16/0 என்று உள்ளது.
ஸ்டார்க் பந்தில் கிராலி எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார், ஆனால் அது ஸ்டார்க் துரதிர்ஷ்டமாக நோ-பால் ஆக இங்கிலாந்துக்கு இன்றைய தினம் அதிர்ஷ்டத்துடன் முடிந்தது.
உஸ்மான் கவாஜா 260 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மீண்டும் வந்த பிராட் 5 விக்கெட்டுகளை 101 ரன்களுக்குக் கைப்பற்றினார். 19வது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பிராட், முக்கிய விக்கெட்டுகளான ஸ்டீவ் ஸ்மித் (67) கவாஜா ஆகியோர் விக்கெட்டுகளைக்கைப்பற்றினார். ஏற்கெனவே முதல் நாளில் டேவிட் வார்னரையும் வீழ்த்தியிருந்தார் பிராட்.
உஸ்மான் கவாஜா 9வது டெஸ்ட் சதத்தை எடுத்து முடித்தார். செஞ்சுரியை 201 பந்துகளில் எடுத்தார் கவாஜா. பிராட் பந்து ஒன்று உள்ளே வர பிளேய்ட் ஆன் முறையில் பவுல்டு ஆகி வெளியேறினார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு கவாஜாவுக்கு டெஸ்ட் சத வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கவாஜாவுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது, ஜோ ரூட் அவருக்கு ஜாக் லீச் பந்தில் கேட்சை விட்டார். அது பட்லர் கையுறையில் பட்டு வந்தது, ஆனால் ரூட் தாமதமாக ரியாக்ட் செய்தார்.
பென் ஸ்டோக்ஸ் நன்றாக வீசக்கூடியவர்தான் ஆனால் இப்போதெல்லாம் பவுன்சர் பவுலர் ஆகிவிட்டார், இதனால் ஏராளமான பவுன்சர்களுக்குப் பிறகு இடுப்பு காயம் அவருக்கு ஏற்பட்டது. மார்க் உட் பிரமாதமாக வீசுகிறார், ஆனால் பலன் இல்லை. பிராட்தான் இன்றைய அதிர்ஷ்டசாலி பவுலர் ஆஷஸ் தொடரில் மட்டும் 125 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் மறைந்த பாப் வில்லிஸ் (123) விக்கெட்டை கைப்பற்றினார். போத்தம் அதிகபட்சமாக 128 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இன்று பிராட் ஸ்டீவ் ஸ்மித் (67), கேமரூன் கிரீன் (5), பாட் கமின்ஸ் (24), கவாஜா (137) மற்றும் முதல் நாளில் டேவிட் வார்னர் ஆகியோரை வீழ்த்தினார்.புதிய பந்தில் பிராட் இருமுறை வெற்றி கண்டார், முதலில் ஸ்மித் எட்ஜ் செய்தார். ஸ்மித்தும், கவாஜாவும் 4வது விக்கெட்டுக்காக 115 ரன்களை சேர்த்தனர். இன்னொரு விக்கெட் கேமரூன் கிரீன், இவரும் எட்ஜ். ஆஸ்திரேலியா 242/5 என்ற நிலையில் இங்கிலாந்து மீண்டும் பிடியை நழுவ விட்டது. உஸ்மான் கவாஜா, தன்னுடன் ஆடிய அலெக்ஸ் கேரி (13), ஸ்டார்க் (34), கமின்ஸ் (24) ஆகியோரை வைத்துக் கொண்டு ஸ்கோரை உயர்த்திக் கொண்டே சென்றார்.
242/5 என்ற நிலையிலிருந்து 416/8 என்று இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடமிருந்த பிடியை நழுவ விட்டு இப்போது சிக்கிக் கொண்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ashes, Ashes 2021-22, Australia vs England