Home /News /sports /

Ashes 3rd test: மெல்போர்னில் கிழிந்து தொங்கும் இங்கிலாந்து 31/4- ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவின் கைகளில்

Ashes 3rd test: மெல்போர்னில் கிழிந்து தொங்கும் இங்கிலாந்து 31/4- ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவின் கைகளில்

மிட்செல் ஸ்டார்க் அசத்தல் பவுலிங்

மிட்செல் ஸ்டார்க் அசத்தல் பவுலிங்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 82 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்து அறுந்து தொங்குகிறது.

    மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 82 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் 4 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்து அறுந்து தொங்குகிறது.

    2ம் நாளான இன்று ஆட்ட முடிவில் கேப்டன் ஜோ ரூட் 12 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். முன்னதாக இங்கிலாந்தின் ஸ்டார் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஆஷஸ் தொடரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முதல் பவுலர் என்ற பெருமையை எட்ட ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    அதாவது 61/1 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா மேலும் 206 ரன்களுக்கு தன் 9 விக்கெட்டுகளையும் இழந்து267 ரன்களுக்குச் சுருண்டது, இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 23 ஓவர்10 மெய்டன் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆலி ராபின்சன், மார்க் உட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜாக் லீச், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். 82 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து ஆஸ்திரேலியாவின் பொறிபறக்கும் பவுலிங்கில் 4 விக்கெட்டுகளை இன்று இழந்து 31 ரன்களையே எடுத்தது.

    13 விக்கெட்டுகள் விழுந்த இந்த 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 2வது இன்னிங்சைத் தொடங்கியபோது 5வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் அடுத்தடுத்த அற்புத பந்துகளில் ஜாக் கிராலி (5), மலான் (0) ஆகியோரைக் காலி செய்தார். பிறகு 11வது ஓவரில் 3வது மற்றும் 5வது பந்துகளில் அறிமுக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர், மெல்போர்ன் மண்ணின் மைந்தன் ஸ்காட் போலண்ட் முதலில் ஹசீப் ஹமீதை 7 ரன்களில் எட்ஜ் ஆக்கி கேரி கேட்சில் வீழ்த்தினார், உடனே நைட் வாட்ச்மேனாக ஜாக் லீச் இறக்கப்பட்டார். ரவுண்ட் த விக்கெட்டில் வந்த போலண்ட் பந்தை அதே கோணத்தில் இடது கை ஜாக் லீச்சுக்கு உள்ளே கொண்டு வர அவர் ஆடாமல் விட்டார் பவுல்டு ஆகி வெளியேறினார்.

    போலண்ட் 1 ஓவர் 1 ரன் 2 விக்கெட், ஸ்டார்க் 2 விக்கெட். இங்கிலாந்து 31/4 என்று என்று இன்னும் 51 ரன்கள் எடுத்தால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கலாம் என்ற இக்கட்டான நிலையில் இன்று ஆட்டத்தை முடித்தது. 3ம் நாள் இந்த 51 ரன்களையும் எடுக்க முடியாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தால் இதை விட பெரிய தோல்வி எதுவும் இருக்க முடியாது. ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என்று வென்று ஒயிட் வாஷ் கொடுக்கும் என்பதோடு கோப்பையை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    இன்றைய தினத்தில் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை காத்திருக்கிறது, அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனை நடைபெறவிருக்கிறது காரணம், அணி நிர்வாகக்குழுவினர் இருவருக்கும் இவர்களது குடும்பத்தார் இருவருக்குமாக 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்திருப்பதே.

    39 வயது ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் இங்கு விக்கெட்டுகளை எடுக்க வேண்டி இருந்தது. அதுவும் குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் (21 பவுல்டு), மார்கஸ் ஹாரிஸ் (76) ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதே மைதானத்தில்தான் 2002-ல் ஆண்டர்சன் அறிமுகமானார்.

    ஆன்டர்சன்


    இன்று 61/1 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா நேதன் லயன் (10), மார்னஸ் லபுஷேன் (1), ஸ்டீவ் ஸ்மித் (21) விக்கெட்டுகளை இழந்து 110/4 என்று ஆனது, ஆனால் அங்கிருந்து இங்கிலாந்து பிடியை நழுவ விட்டது. ஹாரிசும், டிராவிஸ் ஹெட்டும் (27), சேர்ந்து 61 ரன்களையும். பாட் கமின்ஸ் (21), மிட்செல் ஸ்டார்க் சேர்ந்து 34 ரன்களையும் சேர்க்க ஆஸ்திரேலியா 267 ரன்களை எட்டியது, 82 ரன்கள் முன்னிலை பெற்றது.

    Also Read: லார்ட்ஸில் ‘லார்ட்’, செஞ்சூரியனில் ‘செஞ்சுரியன்’- புதிய ‘கிங்’ ராகுல்

    நாளை ஆட்டத்தின் 3வது நாள் இங்கிலாந்தின் முதல் குறிக்கோள் 51 ரன்களை எட்டி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பது பிறகு ஒரு 100 ரன்களாவது வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை கொஞ்சமாவது ஆட்டிப்பார்ப்பது, ஆனால் டெஸ்ட்டை இங்கிலாந்தினால் இனி காப்பாற்ற முடியாது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Ashes 2021-22, Australia vs England, Joe Root, Pat Cummins

    அடுத்த செய்தி