டிசம்பர் 16ம் தேதி தொடங்கும் ஆஷஸ் தொடர் 2021-22-ன் அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு கிடைத்துள்ளது. காரணம் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இல்லை. இவர்களுக்கு மாற்று வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இடுப்பு காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் அடிலெய்டில் ஆட மாட்டார். மெல்போர்ன் டெஸ்ட்டுக்கு முன்பாக அவர் குணமடைந்தால் அணிக்குத் திரும்புவார், ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே போல் 94 ரன்களை பிரிஸ்பன் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அடித்த டேவிட் வார்னர் நெஞ்செலும்பில் ஒரு பந்தை வாங்கி காயம் ஏற்பட்டது, இதனையடுத்து இவரும் வீடு போய் சேர்ந்துள்ளார். இவருக்குப் பதிலாக உஸ்மான் கவாஜா தொடக்கத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமான விஷயம் என்னவெனில் 152 ரன்களை 148 பந்துகளில் விளாசிய ட்ராவிஸ் ஹெட், மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் வீடுதிரும்பியுள்ளார்கள் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்களும் இல்லாமல் போனால் இங்கிலாந்துக்கு ஜாலிதான் அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி பெற அருமையான வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் திரும்புகின்றனர், ஜாக் லீச், கிறிஸ் வோக்ஸ் வழி விட வேண்டும் என்று தெரிகிறது. ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாக சேர்க்கப்படும் ஜை ரிச்சர்ட்சன் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆனால் இவரும் காயத்துக்குப் பெயர் போனவர்தான்.
Also Read: ‘2019-ம் ஆண்டுக்குப் பிறகு கோலி ஒன்றுமில்லாமல் போய்விட்டாரே’
ஆனால் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் டாஸ்மேனியா மற்றும் குவீன்ஸ்லாந்துக்கு எதிராக முறையே 7 மற்றும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் ஜை ரிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசில்வுட்டுக்குப் பதிலாகச் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
Also Read: 100% சம்பளத்தை இழந்த இங்கிலாந்து வீரர்கள்- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5 புள்ளிகளும் காலி
ஆஸ்திரேலியா பேட்டிங் பலவீனம்தான். அதை அடிலெய்டில் நன்றாகப் பயன்படுத்தி இங்கிலாந்து வெல்ல வார்னர், ஹேசில்வுட் இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.