HOME»NEWS»SPORTS»cricket that is indian cricket different rules for different people gavaskar mut

விராட் கோலிக்கு ஒரு விதி, டி.நடராஜனுக்கு வேறொரு விதியா?- சுனில் கவாஸ்கர் பாய்ச்சல்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம் முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன.

விராட் கோலிக்கு ஒரு விதி, டி.நடராஜனுக்கு வேறொரு விதியா?- சுனில் கவாஸ்கர் பாய்ச்சல்
சுனில் கவாஸ்கர்
  • Share this:

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியுடன் தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலிய தொடரின் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிய கேப்டன் விராட் கோலியின் முடிவு குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் தொடக்கம் முதலே வெளிவந்த வண்ணம் உள்ளன.

கபில்தேவ் முன்னதாக இது தொடர்பாக தொடருக்கு முன்னதாகவே கூறும்போது, ‘சுனில் கவாஸ்கர் தன் மகனை பல மாதங்கள் சென்றுதான் பார்க்க முடிந்தது. ஆனால் விராட் கோலியின் இந்த முடிவை மதிக்கிறேன்’ என்ற ரீதியில் தெரிவித்திருந்தார்.

தற்போது அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு விராட் கோலியின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சுனில் கவாஸ்கரும் கோலி தன் முதல் குழந்தைப் பிறப்புக்காக தொடரை விடுத்து நாடு திரும்புவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.



தி இந்து ஸ்போர்ட்ஸ்டார் ஆங்கில ஊடகத்தில் சுனில் கவாஸ்கர் எழுதியுள்ள பத்தியில் இது தொடர்பாக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். அந்தப் பத்தியில் அவர் கூறியிருப்பதாவது:

அணி நிர்வாகத்தின் விதிகள் குறித்து இன்னொரு வீரரும் ஆச்சரியப்படுவார். ஆனால் அவர் இது குறித்து எதுவும் பேச முடியாது. காரணம் அவர் புதிதாக அணிக்கு வந்தவர். அவர் டி.நடராஜன். இந்த இடது கை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் டி20-யில் மிகப்பிரமாதமாக ஆடினார். ஹர்திக் பாண்டியா தனது தொடர் நாயகன் விருதையும் கூட டி.நடராஜனுடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு டி.நடராஜனின் பவுலிங் அமைந்தது.

டி.நடராஜனும் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் போதே தன் முதல் குழந்தைக்குத் தந்தையானார். ஐபிஎல் முடிந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நடராஜன் நேரடியாக ஆஸ்திரேலியா சென்றார். அவரது அபாரமான பந்து வீச்சைப் பார்த்த பிறகு டெஸ்ட் தொடருக்கு அவரை அங்கேயே தங்க வைத்தனர், ஆனால் அணியில் பங்கு பெறுவதற்காக அல்ல, மாறாக வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்காக.

இதைக் கற்பனை செய்து பாருங்கள்.. ஒரு வடிவத்தில் மேட்ச் வின்னரான அவர் இன்னொரு வடிவத்தில் வலைப்பந்து வீச்சாளர்! இவர் ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பிறகே இந்தியா வந்து தன் முதல் குழந்தையை, தன் மகளை முதல் முறையாகப் பார்க்கவிருக்கிறார். ஆனால் இங்கு நம் கேப்டன் முதல் டெஸ்ட் முடிந்தவுடன் தன்னுடைய முதல் குழந்தைப் பிறப்புக்காக நாடு திரும்புகிறார்.

இதுதான் இந்திய கிரிக்கெட், ஒருவருக்கு ஒரு விதி, இன்னொரு வீரருக்கோ மற்றொரு விதி.

இவ்வாறு கடுமையாக கவாஸ்கர் அந்தப் பத்தியில் விமர்சித்துள்ளார்.
Published by:Muthukumar
First published: