முகப்பு /செய்தி /விளையாட்டு / தேங்க்யூ ரகானே: முடிந்தது என முடிவு கட்டிய ரசிகர்கள்

தேங்க்யூ ரகானே: முடிந்தது என முடிவு கட்டிய ரசிகர்கள்

ரகானே.

ரகானே.

நம் இந்திய அணி நிர்வாகத்தின், கேப்டன்களின் சாபக்கேடு என்னவெனில் சொதப்பும் வீரர்களை ‘நாங்கள் பேக் செய்கிறோம்’ அவர் ஃபார்முக்கு வருவார் என்று கூறி இன்னொரு எதிர்கால வீரரின் வாய்ப்பைக் காலி செய்வததுதான்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் துணை கேப்டன் அஜிங்கிய ரகானே ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறியது மூலம் அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருவதாக ரசிகர்கள் அவருக்கு தேங்க்யூ மெசேஜ் போட்டு வருகின்றனர்.

ஓவல் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து அவுட் ஸ்விங்கருக்கும் இன்ஸ்விங்கருக்கும் வித்தியாசத்தைக் கணிக்க முடியாமல் ஆடிய ரகானே ஒரு எல்.பியிலிருந்து தப்பி அடுத்த இன்ஸ்விங்கரில் கிறிஸ் வோக்ஸிடம் சிக்கினார். இந்த முறை அவரை ரிவியூ செய்ய கோலி அனுமதிக்கவில்லை. ரகானே லார்ட்ஸ் வெற்றிப் பங்களிப்பாக 61 ரன்கள் எடுத்ததுதான் ஒரே உருப்படியான ஸ்கோராக இந்தத் தொடரில் அமைந்தது. இது தவிர ஒரே பேட்டிங் சொதப்பல்தான். பலரும் அவரை அணியிலிருந்து நீக்கி சூரிய குமார் யாதவ்வை கொண்டு வர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

நெட்டிசன்கள் அவருக்கு குட் பை மெசேஜ் போட்டு வருகின்றனர், குறிப்பாக அதில் ஒரு கமெண்ட், ‘லகான் படமாக இருந்தால் ரகானேவை வைத்துக் கொண்டு நாம் எவ்வளவு வரி கட்டியிருக்க வேண்டியிருந்திருக்கும்’ என்று ஒரு நெட்டிசன் செம கிண்டலடித்துள்ளார். மேலும் பலரும் தேங்க்யூ ரகானே என்று மெசேஜ் போட்டு வருகின்றனர், அதாவது இந்த இன்னிங்ஸிலும் ஏதாவது அரைகுறையாக ஒரு 40 ரன்களை எடுத்து பங்களிப்பு செய்தார் என்று அடுத்த போட்டியிலும் அவரது இடத்தை தக்கவைத்து விடுவாரோ என்று ரசிகர்களுக்கு ஒரே பயம் அதனால் தேங்க் யூ ஃபார் த டக் என்ற ரீதியில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Also Read: Oval test: ஷர்துல் தாக்கூர்-ரிஷப் பந்த் சதக்கூட்டணி: இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு- இங்கிலாந்து ஃபைட்பேக்

Also Read: NZvsBAN | டி20 கிரிக்கெட்டுக்கு சாவுமணி அடிக்கும் குழி பிட்ச்கள்: தனக்கே குழிதோண்டிய வங்கதேச தோல்வி

 நம் இந்திய அணி நிர்வாகத்தின், கேப்டன்களின் சாபக்கேடு என்னவெனில் சொதப்பும் வீரர்களை ‘நாங்கள் பேக் செய்கிறோம்’ அவர் ஃபார்முக்கு வருவார் என்று கூறி இன்னொரு எதிர்கால வீரரின் வாய்ப்பைக் காலி செய்வததுதான். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி இல்லாமல் மெல்போர்னில் 124 ரன்கள் எடுத்து இந்திய அணியை அபாரமாக வழிநடத்தி தொடரை 2வது முறையாக ஆஸ்திரேலியாவில் வெல்லச் செய்தார் ரகானே, அதற்குள் அவருக்கு இப்படி ஒரு வீழ்ச்சி நடப்பது துரதிர்ஷ்டமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajinkya Rahane