ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை ரன்களை ஜோ ரூட் தவிடுபொடியாக்குவார் - சொல்கிறார் ஆஸ்திரேலிய லெஜண்ட்

சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை ரன்களை ஜோ ரூட் தவிடுபொடியாக்குவார் - சொல்கிறார் ஆஸ்திரேலிய லெஜண்ட்

ஜோ ரூட்

ஜோ ரூட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நேற்று நியூசிலாந்தின் வெற்றிக்கனவுகளை தன் 26வது டெஸ்ட் சதத்தின் மூலம் தகர்த்த இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மைல்கல்லை கடந்த 14வது வீரராகவும் 2வது இங்கிலாந்து வீரராகவும் சாதித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் மார்க் டெய்லர் இவர் சச்சின் டெண்டுல்கரின் 15,000 ரன்கள் என்ற உலக சாதனையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • Cricketnext
 • 1 minute read
 • Last Updated :

  லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நேற்று நியூசிலாந்தின் வெற்றிக்கனவுகளை தன் 26வது டெஸ்ட் சதத்தின் மூலம் தகர்த்த இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மைல்கல்லை கடந்த 14வது வீரராகவும் 2வது இங்கிலாந்து வீரராகவும் சாதித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் லெஜண்ட் மார்க் டெய்லர் இவர் சச்சின் டெண்டுல்கரின் 15,000 ரன்கள் என்ற உலக சாதனையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

  இப்போது ஜோ ரூட் 118 போட்டிகளில் 10,015 ரன்களில் உள்ளார், சச்சின் டெண்டுல்கர் போல் 200 டெஸ்ட்கள் ஆட முடிந்தால் கணக்கு ரீதியாக நிச்சயம் ஜோ ரூட் சச்சின் சாதனையை உடைத்து உலகிலேயே அதிக ரன்கள் எடுத்த சாதனையாளராக நம்பர் 1 இடத்தைப் பிடிக்கலாம் என்கிறார் மார்க் டெய்லர்.

  ஸ்கை ஸ்போர்ட்ஸில் மார்க் டெய்லர் கூறியதாவது:

  ஜோ ரூட் இன்னும் 5 ஆண்டுகள் எப்படியும் ஆடிவிடுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் ரன்கள் குவிக்கும் வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கரின் 15,921 ரன்கள் சாதனையை உடைப்பார் என்றே தோன்றுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஜோ ரூட் பேட் செய்ததைப் போல் நான் அவரை இதற்கு முன்பு கண்டதில்லை.

  அவர் தன் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருக்கிறார், அவர் ஆரோக்கிய நன்றாக இருந்தால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைப்பது சாத்தியம்தான். இவ்வாறு கூறினார் மார்க் டெய்லர்.

  2013-ல் சச்சின் டெண்டுல்கர் ரிட்டையர் ஆனார். ஆனால் 15,000 ரன்கள், இரு வடிவங்களிலும் சேர்த்து 100 சதங்கள் என்று முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். முதலில் சுனில் கவாஸ்கர் இந்தியாவில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனை வீரராக இருந்தார், அதை ஆலன் பார்டர் உடைத்தார், ஆனால் சச்சின் சாதனையை உடைப்பது அத்தனை சுலபமல்ல, ஆனால் ஜோ ரூட் உடைப்பார் என்று மார்க் டெய்லர் நம்புகிறார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Joe Root, Sachin tendulkar