Home /News /sports /

கோலி என்ன கீழ்த்தரமானவரா? வாயை மூடுங்கள்! இங்கிலாந்து ஊடகங்களை சாடிய முன்னாள் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்

கோலி என்ன கீழ்த்தரமானவரா? வாயை மூடுங்கள்! இங்கிலாந்து ஊடகங்களை சாடிய முன்னாள் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர்

விராட் கோலி

விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி கொஞ்சம் கூடுதல் உற்சாகமாக, அதாவது அவரது வழக்கமான ஆக்ரோஷமான நடத்தையைக் காட்டினார், பேர்ஸ்டோவைச் சீண்டினார், அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார், அலெக்ஸ் லீஸைப் போய்ச் சீண்டினார், இந்தியாவ் விக்கெட்டுகள் வீழ்த்தினால் டான்சிங் ரோஸ் ஆகி கொண்டாடினார். இதையெல்லாம் பார்த்த ஆங்கிலேய ஊடகங்கள் அவரை விரும்பத்தகாத ஒரு மனிதர் என்றும் வெறுக்கத்தக்கவர் என்றும் எழுதியும் பேசியும் ஏசியும் வருகின்றன.

மேலும் படிக்கவும் ...

    இதைக் கண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கூட வாய்மூடி மவுனியாக உள்ளது, நம் நாட்டு லெஜண்ட் ஒவரை இங்கிலாந்து மீடியா போட்டு இப்படி வசை வசை மேல் பாடுகிறது ஒருவரும் கோலிக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட விடவில்லை, மாறாக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட் கோலி என்ன கீழ்த்தரமானவரா என்று கேட்டு கொந்தளித்துள்ளார்.

    கோலியை வில்லனாகச் சித்தரித்ததில் கடைசியாக ஜார்ஜ் டோபெல் என்ற பிரபல கிரிக்கெட் ரிப்போர்ட்டர் அலெக்ஸ் லீஸ் விக்கெட்டை இந்திய வீரர்கள் கொண்டாடும் படத்தை வெளியிட்டு அதில் கோலி பிட்சின் மீது ஓடி வந்து பிட்சை சேதம் செய்வது போல் காட்டியுள்ளார். மிகவும் கேலியாக, “அலெக்ஸ் லீஸ் விக்கெட்டை கொண்டாட ஒரு சுவாரசியமான இடம்” என்று பிட்சில் டேஞ்சர் ஏரியாவில் கோலி காலை வைத்ததாக அவரது குற்றச்சாட்டு அமைந்தது.

    இதனை விமர்சித்த டினோ பெஸ்ட், “தைரியமானவர், பிரவுன் நிற, கருப்பு நிற மனிதர்கள் என்றால் உங்களால் எப்போதும் இப்படித்தான் நடத்தப்படுவார்கள், அவர்களை ஒழிப்பீர்கள். உங்களின் பிரச்சனையே இதுதான், விராட் மற்றும் ஆங்கிலேயர் அல்லாத எந்த ஒரு வீரரைப் பற்றியும் ஆங்கில ஊடகங்கள் எழுதுவதைப் படித்துப் படித்து களைப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் டினோ பெஸ்ட்.

    கோலியின் செய்கை ஆங்கிலேயர்களை அச்சுறுத்துகிறது அதனால்தான் அவரின் செய்கைகளை ஏதோ பேய் பிசாசு போன்று சாத்தான் போன்று வர்ணிக்கின்றனர் என்று சாடியுள்ளார்.

    ஜார்ஜ் டாபெல் டினோ பெஸ்ட்டின் ட்வீட்டைப் பார்த்து, கமான் டினோ உனக்கு என்னைப் பற்றி தெரியும் என்று நான் ஒரு நிறவெறியாளன் அல்ல என்றார், அதை ஏற்றுக் கொண்ட டினோ பெஸ்ட், “உங்கள் சக பணியாளர்கள், இங்கிலாந்து வர்ணனையாளர்களுக்குச் சொல்லி வையுங்கள் விராட் கோலி ஒன்றும் கீழ்த்தரமானவர் அல்ல, அவர் நவீன கிரிக்கெட்டின் ஆளுமை. மறுபடியும் பாருங்கள் விராட் கோலி ஆங்கிலேயர் இல்லை, அதனால் அவரைப்பற்றி இப்படிப்பட்ட கட்டுரை வந்துள்ளது, இவரை அடிபணிய வைக்க இப்படிச் செய்கிறீர்கள்” என்று சாடியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Virat Kohli

    அடுத்த செய்தி