#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் - லாங்கர் சூசகம்!

Team travelling to India not Australia's final #WorldCup squad | இந்திய தொடருக்காக ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 16 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டது. #INDvAUS

#WorldCup2019: ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் - லாங்கர் சூசகம்!
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். (Getty)
  • News18
  • Last Updated: February 7, 2019, 8:05 PM IST
  • Share this:
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், வார்னர் இடம்பெறுவார்கள் என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடியது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்து இந்தியா வரலாறு படைத்தது.

team india, இந்திய அணி
ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி. (BCCI)



ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அப்போது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக இருப்பதை அணி நிர்வாகம் நன்றாகப் புரிந்துகொண்டது.

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நெருக்கி வருவதால், விரைவில் இவர்கள் இருவரையும் அணியில் சேர்ப்பதற்கான முயற்சியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது. ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னருக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் முடியவில்லை.

Smith, Warner, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்
டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித். (Reuters)
உலகக்கோப்பைக்கு முன், ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 16 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவுக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடருக்கான அணி இல்லை என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு நாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி பின்தங்கியுள்ளதைப் பற்றி கவலை இல்லை. சிறந்த 15 அணிகள் உலகக்கோப்பையில் விளையாடும். ஸ்மித், வார்னர் ஆகிய இருவரும் அணிக்கு திரும்ப கடுமையாக முயற்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

இந்திய தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு... முக்கியமான வீரர் மிஸ்ஸிங்!

Also Watch...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading