Home /News /sports /

நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார்? ரசிகர்களுக்கு பிசிசிஐ வைத்த டெஸ்ட்!

நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார்? ரசிகர்களுக்கு பிசிசிஐ வைத்த டெஸ்ட்!

சிக்சர் போட்டியில் பங்கேற்ற சாஹல் மற்றும் தோனி. (BCCI)

சிக்சர் போட்டியில் பங்கேற்ற சாஹல் மற்றும் தோனி. (BCCI)

#TeamIndia's fun SIXES challenge at the nets in #Ranchi | ராஞ்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் மேற்கொண்டனர். #INDvAUS

  • News18
  • Last Updated :
    ராஞ்சியில் நடந்த வலைப்பயிற்சியில் நீண்ட தூரம் சிக்சர் அடித்தவர் யார் என்ற கேள்வி கேட்டு பிசிசிஐ தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நாளை (மார்ச் 8) நடைபெற உள்ளது.

    இதற்காக, ராஞ்சி வந்து சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று தீவிர வலைப்பயிற்சியில் மேற்கொண்டனர்.

    MS Dhoni, எம்.எஸ்.தோனி
    ஆக்ரோசமாக பயிற்சி செய்த எம்.எஸ்.தோனி. (BCCI)


    வலைப்பயிற்சியின்போது இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நீண்ட தூரம் சிக்சர் அடிக்கும் ஜாலியான போட்டி வைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மகேந்திர சிங் தோனி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சாஹல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அனைவருக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, யார் அதிக தூரம் சிக்சர் அடித்தார் என கேட்டுள்ளது.



    வீடியோவைப் பார்க்கும்போது, பேட்ஸ்மேன்களை விட சுழற்பந்து வீச்சாளர் சாஹல் நன்றாக சிக்சர் அடித்ததை பார்க்க முடிந்தது. இருப்பினும், தோனியே நீண்ட தூரம் சிக்சர் அடித்துள்ளார் என வீடியோவில் தெரிகிறது.

    சொந்த மண்ணில் ஆஸி.யை தூசியாக்குவாரா தோனி?

    ராஞ்சி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

    VIDEO: மேக்ஸ்வெல்லை அவுட்டாக்க தோனி கொடுத்த சூப்பர் ஐடியா!

    VIDEO: வீரர்களை தனது விலையுயர்ந்த காரில் அழைத்துச் சென்ற தோனி!

    கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் கடினம் - விஜய் சங்கர் ஓபன் டாக்!

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Cricket, India vs Australia, Sixer

    அடுத்த செய்தி