• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணி குறித்து வாசிம் ஜாஃபர் பகிர்ந்த புகைப்படம்.. குழப்பத்தில் ரசிகர்கள்

இந்திய அணி குறித்து வாசிம் ஜாஃபர் பகிர்ந்த புகைப்படம்.. குழப்பத்தில் ரசிகர்கள்

வாசிம் ஜாஃபர்

வாசிம் ஜாஃபர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாசிம் ஜாஃபர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை குழப்பமடைய வைத்தது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த பின் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பை தொடருடன் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியின் விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ரூத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐய்யர், யஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்தர் அஸ்வின், அக்ஷர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகம்மது சிராஜ். மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் பும்ராவிற்கு இந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய அணியில் இளம் வீரர்கள் பட்டாளம் உள்ளதால் பலர் இந்த அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் இந்திய அணி குறித்து பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.



    வாசிம் ஜாஃபர் ட்வீட் பொதுவாக அனைவரது பாராட்டுகளை பெறும் வண்ணம் இருக்கும். மீம்ஸ், வார்த்தை ஜாலம், நகைச்சுவையான புகைப்படங்கள் என பல்வேறு தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்படியாக அவரது பதிவு இருக்கும். அதன்படி தற்போது இந்திய அணி விவரத்தை பதிவிட்டுள்ள அவர் 5 சாவி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

    வாசிம் ஜாஃபர் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து பலரும் குழப்பமடைந்தனர். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் 5 ஓபனர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதையே அவர் வெளிப்படுத்தி உள்ளார். பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், வெங்டேஷ் ஐயர் உள்ளிட்ட 5 ஒபனர்கள் உள்ளனர். வாசிம் ஜாஃபரின் இந்த பதிவிற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: