இந்திய கேப்டன் தோனி தன்னை சில ஆட்டங்களுக்கு நீக்கியதையடுத்து, 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ODI கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்ததாகவும் சச்சின் டெண்டுல்கர்தான் தன்னை சமாதானப்படுத்தி தேற்றியதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகும், வீரேந்திர சேவாக் போன்ற ஒரு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த தொடக்க பேட்டர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இன்னும் பல வருடங்கள் இவர்தான் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனம் என்ற நிலை கூட நீடித்து வருகிறது. . ஆனால் சேவாக்கின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்விளையாட்டை விட்டு வெளியேற அவர் நினைத்தார்.
கிரிக்பஸ் ஊடகத்தின் மேட்ச் பார்ட்டி நிகழ்ச்சியில் சேவாக் கூறியது:
2008 இல் நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு குறித்த எண்ணம் என் மனதில் எழுந்தது. நான் டெஸ்ட் தொடரில் மீண்டும் 150 ரன்கள் எடுத்தேன். ஒருநாள் போட்டிகளில், மூன்று நான்கு முயற்சிகளில் என்னால் அந்த அளவுக்கு ஸ்கோர் செய்ய முடியவில்லை. அதனால் எம்எஸ் தோனி என்னை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கினார் அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன் என்று நினைத்தேன்.
அப்போது சச்சின் டெண்டுல்கர் என்னை தடுத்து நிறுத்தினார். அவர், 'இது உங்கள் வாழ்க்கையின் மோசமான கட்டம். காத்திருங்கள், இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள், நன்றாக யோசித்து, அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யுங்கள். நல்லவேளையாக நான் அந்த நேரத்தில் எனது ஓய்வை அறிவிக்கவில்லை.
இரண்டு வகையான வீரர்கள் உள்ளனர் - சவால்களை விரும்புபவர்கள் விராட் அவர்களில் ஒருவர். அவர் அனைத்து விமர்சனங்களுக்கும் செவிசாய்க்கிறார், அவர்கள் தவறு என்று நிரூபிக்க ரன்களை அடித்து களத்தில் எதிர்வினையாற்றுகிறார். மற்ற வகையினர் அனைத்து விமர்சனங்களாலும் பாதிக்கப்படாதவர்கள், ஏனென்றால் நாள் முடிவில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். நான் அப்படிப்பட்ட வீரராக இருந்தேன். யார் என்னை விமர்சித்தாலும் நான் கவலைப்படவில்லை. நான் விளையாடி ரன்களை குவித்து நல்ல மனதுடன் வீட்டிற்கு செல்லவே விரும்பினேன்.
இவ்வாறு கூறினார் சேவாக்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MS Dhoni, Sachin tendulkar, Virender sehwag