அருண் ஜெட்லி மறைவு : கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!

அருண் ஜெட்லி மறைவு : கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
India vs WestIndies
  • Share this:
பா.ஜ.க மூத்த தலைவரும், பி.சி.சி முன்னாள் தலைவருமான அருண் ஜெட்லியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா விவியன் ரிசர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இந்திய அணி வீரர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர்.

பி.சி.சி.ஐ மூத்த நிர்வாகி அனிரூத் சௌத்ரி இந்த யோசனை அளித்ததையடுத்து இந்திய அணி வீரர்கள் இடது கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர்.


கடந்த 9-ம் தேதி உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 66 வயதான அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது.

பிரதமர் அமைச்சர்கள் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நேரில் அவரை சென்று சந்தித்தனர். இந்த நிலையில், இன்று 12.08 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்த அருண் ஜெட்லி, கட்சி வேறுபாடு இன்றி பல வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

Loading...

ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது, தற்போதைய மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றில் அருண் ஜெட்லியின் பணி இன்றியமையாதது. அருண் ஜெட்லியின் மரணம் அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Watch

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...