இந்தியா - பாக். போட்டியில் லவ் ஸ்டோரி! மைதானம் அதிர முத்தத்தில் மலர்ந்த காதல் - வீடியோ

ICC World Cup 2019 | India vs Pakistan | காதலுக்கு பெண் சம்மதம் தெரிவக்க இருவரும் முத்தமிட்டு தங்களது அன்பினை வெளிப்படுத்தினர்.

இந்தியா - பாக். போட்டியில் லவ் ஸ்டோரி! மைதானம் அதிர முத்தத்தில் மலர்ந்த காதல் - வீடியோ
மைதானத்தில் காதலை பரிமாறிய ஜோடி
  • News18
  • Last Updated: June 22, 2019, 5:49 PM IST
  • Share this:
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டிக்கு நடுவே இளம் ஜோடி தங்களது காதலை பரிமாறிக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காத அணியாக இந்தியா, நியூசிலாந்து அணிகள் உள்ளது. இந்தியா அணி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பலம்வாய்ந்த அணிகளை வீழ்த்தி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

உலகக் கோப்பை இறுதி போட்டியை விட அதிகம் எதிர்பார்க்கப்பட்டது இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தான். அதிகம் எதிர்பாரக்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் டக்வத் லூயிஸ் முறைப்படி வென்றது. இந்திய ரசிகர்களுக்கு இந்த போட்டி மிகப் பெரிய விருந்தாகவே அமைந்தது என்று சொல்லலாம்.


இந்தப் போட்டியின் போது இளம் ஜோடி தங்களது காதலை பரிமாறி கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மைதானத்தில் இருந்த ஒருவர் பெண்ணிடம் தனது காதலை கூறியுள்ளார். காதலுக்கு பெண் சம்மதம் தெரிவக்க இருவரும் முத்தமிட்டு தங்களது அன்பினை வெளிப்படுத்தினர். அங்கிருந்த மற்ற ரசிகர்களும் இதற்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.



இந்த வீடியோவை அந்த பெண் தற்போது தனது ட்டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காதல் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Also Watch

First published: June 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading