இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை சாருலதா பாட்டி மறைவு

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை சாருலதா பாட்டி மறைவு
  • Share this:
கிரிக்கெட் ரசிகர்களால் உலகெங்கும் அறியப்பட்ட 83 வயது இந்திய கிரிக்கெட் ரசிகை சாருலதா படேல் உயிரிழந்தார்.

இங்கிலாந்தில் வசித்து வந்த அவர் தள்ளாத வயதிலும் மைதானத்துக்கே நேரில் வந்து போட்டிகளை உற்சாகமாக பார்த்து ரசிப்பார். அவரது ஆர்வம் குறித்து கேள்விப்பட்ட விராட் கோலி. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தை காண டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

சாருலதாவின் கிரிக்கெட் பற்றை பார்த்து வியந்த விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் அவரது இருக்கைக்கே நேரில் சென்று பாராட்டினர், அதன் மூலம் சாருலதா கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.


இந்நிலையில் அவர் மறைந்ததாக அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர். சாருலதா படேல் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.சாருலதா படேல் மறைவிற்கு பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல ்தெரிவித்துள்ளது.
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading