தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டிக்கு ஆயத்தமாகும் வகையில், இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க அணி, 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. கே.எல். ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இதில் களம் காணுகிறது.
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியிலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். மேலும், டி-20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது. எனவே இத்தொடரில் ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை நிரூபிக்க போராடுவார்கள் என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. நேற்றைய பயிற்சியின் போது ஹர்திக் பாண்ட்யா பங்கேற்கவில்லை. இன்று அவர், அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பிசிசிஐ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.