தொடர்ந்து 3-வது முறையாக டெஸ்ட் சாம்பியனானது இந்திய அணி!

#TeamIndia retain #ICC #TestChampionshipMace for third consecutive year | இந்திய அணிக்கு சுமார் ரூ.7 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

news18
Updated: April 1, 2019, 7:33 PM IST
தொடர்ந்து 3-வது முறையாக டெஸ்ட் சாம்பியனானது இந்திய அணி!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதத்துடன் கோலி. (ICC)
news18
Updated: April 1, 2019, 7:33 PM IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆண்டின் இறுதிவரை முதலிடம் பிடித்தற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி தண்டாயுதத்தை தக்க வைத்துக்கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அணிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் வழங்கப்படும். அந்த வரிசையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மிக வலிமையான அணியாக வலம் வருகிறது ‘கிங்’ கோலி தலைமையிலான இந்திய அணி.

ICC World Test Championship Mace 2
டெஸ்ட் சாம்பியன் தண்டாயுத்துடன் இந்திய கிரிக்கெட் அணி. (ICC)


கடந்த சீசனில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. தென் ஆஃப்ரிக்காவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. அதற்கு முன்பு, இங்கிலாந்திடம் 1-4 என தொடரை இழந்தது.

இருப்பினும், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது. இதன்மூலம், ஆண்டின் இறுதிவரை முதலிடம் பிடித்தற்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி தண்டாயுதத்தை தக்க வைத்துக்கொண்டது.

ICC World Test Championship Mace
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதத்துடன் கோலி. (ICC)


அத்துடன், இந்திய அணிக்கு சுமார் ரூ.7 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. 108 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு சுமார் ரூ.3.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
Loading...
#IPL2019 | சூதாட்ட சர்ச்சையில் ரிஷப் பண்ட்? பிசிசிஐ பதில்!

வைரலாகும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ!

உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? பிசிசிஐ தகவல்!

#CSKvRR | டி-20 வரலாற்றில் இமாலய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா!

ஹாட்ரிக் தோல்வி.. ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... அதிருப்தியில் ராஜஸ்தான் அணி!

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

Also Watch...
PHOTOS | ஹாட்ரிக் வெற்றி: சூப்பர் கோச் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...