முகப்பு /செய்தி /விளையாட்டு / இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி - இளம் வீரர்களுடன் களம் காணும் இந்திய அணி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி-20 போட்டி - இளம் வீரர்களுடன் களம் காணும் இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி

டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா - தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காயத்தால் லோகேஷ் ராகுல் விலகியதால் ரிஷப் பந்த் அணியை வழிநடத்துகிறார்.

இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க அணி 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இத்தொடருக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில், காயம் காரணமாக அவர் விலகினார். இதனால், ரிஷப் பந்த் அணியை வழி நடத்துகிறார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு 4 மாதங்களே உள்ள நிலையில், அதில் இடம்பெறும் நோக்கில் இந்திய இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் விலகியது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருந்த போதும், ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதித்த ஹர்திக் பாண்டியா வருகை அணிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் முத்திரை பதித்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், 2010-ம் ஆண்டுக்குப் பின் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்கா டி-20 தொடரை இழந்ததில்லை. இதனால், இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது. அதேவேளையில், டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக ஆடிய 12 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தினால், டி-20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தும்.

First published:

Tags: Cricket, Hardik Pandya, Rahul Dravid, Rishabh pant, T20, Team India