• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • #HowsTheJosh: வெற்றிக் கோப்பையுடன் முழக்கமிட்ட இந்திய வீரர்கள்!

#HowsTheJosh: வெற்றிக் கோப்பையுடன் முழக்கமிட்ட இந்திய வீரர்கள்!

கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி வீரர்கள். (Video Grab)

கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி வீரர்கள். (Video Grab)

#TeamIndia Lauded #HowsTheJosh After #5thODI Victory | நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. #NZvIND

  • News18
  • Last Updated :
  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் கோப்பையை கையில் ஏந்தியவாறு ‘Hows The Josh’ என முழக்கமிட்டனர்.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, 4-வது போட்டியில் படுதோல்வி அடைந்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    Rohit Sharma, Kane Williamson, ரோகித் சர்மா, கேன் வில்லியம்சன்
    5-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் போட்ட இரு அணி கேப்டன்கள். (BCCI)


    இன்று நடந்த (பிப்.3) நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 4-வது போட்டியில் அடைந்த படுதோல்விக்கு, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பதிலடி கொடுத்தது.

    Indian Team, இந்திய அணி
    இந்திய அணி வெற்றி. (BCCI)


    இதனை அடுத்து, ஒரு நாள் தொடருக்கான வெற்றிக்கோப்பை கேப்டன் ரோகித் சர்மாவிடம் வழங்கப்பட்டது. கோப்பையை பெற்றுக்கொண்ட ரோகித், வழக்கம்போல் அணியின் இளம் வீரரான ஷுப்மன் கில்லிடம் அதை கொடுத்தார். பின்னர், கோப்பையுடன் இந்திய வீரர்கள் உற்சாகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர்.

    Indian Team, இந்திய கிரிக்கெட் அணி
    ஒரு நாள் தொடருக்கான கோப்பை உடன் இந்திய அணி. (BCCI)


    இறுதியில், ‘Hows The Josh... High Sir..’ (பாருங்கள், எங்களது உற்சாகம் எந்த அளவுக்கு உள்ளது) என முழக்கமிட்டனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



    ‘Hows The Josh’ என்ற முழக்கம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பாலிவுட் திரைப்படமான ‘உரி-தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’-இல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    #NZvIND: வைரலாகும் தோனியின் அசத்தல் ரன் அவுட் வீடியோ!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: