கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ளும் நிலையில் வலைப்பயிற்சியின் போது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆஃப் ஸ்பின் வீசி அசத்திய வீடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்திய அணிக்கு ஆடிய போது அவ்வளவாக பவுலிங் வீசாத ராகுல் திராவிட் நேற்று வலையில் ஆஃப் ஸ்பின் வீசினார். தான் ஆடும் காலத்தில் ராகுல் திராவிடை ஆல் ரவுண்டர் என்றே அழைப்பார்கள், காரணம் அவர் விக்கெட் கீப்பிங் செய்வார், ஸ்லிப்பில் உலகின் நம்பர் 1 பீல்டர். அதிக கேட்ச்களை எடுத்தவர். பேட்டிங்கில் கிங். நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணிலேயே சச்சின் டெண்டுல்கரைக் காட்டிலும் சிறப்பாக ஆடியவர் ராகுல் திராவிட்.
இந்திய கிரிக்கெட் டீம் சோஷியல் மீடியா ராகுல் திராவிட் பந்து வீசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. விலைமதிப்பற்றதாகப் பார்க்கப்படும் இந்தத் தருணம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை மட்டுமே ராகுல் திராவிட் எடுத்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஒன்றில் பாகிஸ்தானின் ஸ்டைலிஷ் ஓபனர் சயீத் அன்வர் விக்கெட்டை ராகுல் திராவிட் எடுத்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
இன்று இந்திய அணியில் ஷ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டில் களம் காண்கிறார். இதனை கேப்டன் ரகானே உறுதி செய்துள்ளார். இந்திய அணி வருமாறு:
சுப்மன் கில்
மயங்க் அகர்வால்
புஜாரா
ஷ்ரேயாஸ் ஐயர்
ரஹானே (கேப்டன்)
சாஹா (விக்கெட் கீப்பர்)
ரவீந்திர ஜடேஜா
அக்சர் படேல்
ஆர் அஸ்வின்
முகமது சிராஜ்/இஷாந்த் சர்மா
உமேஷ் யாதவ்.
கேன் வில்லியம்சன் தலைமை நியூசிலாந்து அணி:
டாம் லேதம், வில் யங், கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளெண்டல், கைல் ஜேமிசன் அல்லது சாண்ட்னர், டிம் சவுதீ, அஜாஜ் படேல், வில் சோமர்வில், நீல் வாக்னர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.