Home /News /sports /

INdia vs Newzealand | இந்திய அணிக்கு 40% அபராதம்..!

INdia vs Newzealand | இந்திய அணிக்கு 40% அபராதம்..!

INDvsNZ

INDvsNZ

நாளை நடைபெறும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்களுக்கு 40 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும்.

    இந்நிலையில் வெலிங்டன் மைதானத்தில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்த்தை விட பந்துவீச அதிகநேரம் எடுத்துக் கொண்டதாக  40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கள நடுவர்கள் கிறிஸ் பிரவுன், ஷான் ஹெய்க் மற்றும் மூன்றாவது நடுவர் ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

    Also Read : வேணாம் தம்பி பேசாம போய்டு... பரபரப்பான கட்டத்தில் கலகலப்பூட்டிய சாஹல்
     இந்த குற்றச்சாட்டை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் ஓப்புக்கொண்டுள்ளதால் அடுத்தக்கட்ட விசாரணை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Cricket, Ind vs NZ

    அடுத்த செய்தி