சாதனை படைக்க இருக்கும் இந்திய அணி.... அணியில் என்னென்ன மாற்றங்கள்?

news18
Updated: October 10, 2019, 7:12 AM IST
சாதனை படைக்க இருக்கும் இந்திய அணி.... அணியில் என்னென்ன மாற்றங்கள்?
news18
Updated: October 10, 2019, 7:12 AM IST
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களில் பங்கேற்றுள்ளது. 20 ஓவர் தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இதையடுத்து, 2-வது டெஸ்ட் போட்டி, புனே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று, தொடர்ந்து அதிக தொடர்களைக் கைப்பற்றிய சாதனையை படைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆம் இதுவரை சொந்த மண்ணில் தொடர்ந்து 10 தொடர்களை வென்றுள்ளது இந்திய அணி


முதல் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் எந்த மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் செனுரன் முத்துசாமி, டேன் பீடிட் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.Also watch

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...