முகப்பு /செய்தி /விளையாட்டு / ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா.. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம்

ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா.. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகம்

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

Rahul Dravid : தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ள இந்திய அணியுடன் திராவிட் எப்போது சேர முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கோவிட் -19 பாசிட்டிவ்  என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவே. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக் கோப்பையில் விளையாட ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் செல்லவுள்ள அணியுடன் திராவிட் எப்போது சேர முடியும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விரிவான தகவல் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய ஜிம்பாப்பே ஒருநாள் தொடருக்கு ராகுல் திராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் இந்திய அணியின் பிற உறுப்பினர்கள் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைந்துள்ளனர் என்பதும் அறியப்படுகிறது.

பரம வைரியான பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய போட்டி 28ம் தேதி நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்திய அணி துபாயில் பயிற்சியை தொடங்க உள்ளது. கேஎல் ராகுல், அக்சர் படேல், அவேஷ் கான், தீபக் ஹூடா போன்ற சில வீரர்கள் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று திரும்புவதால் தாமதமாக துபாய் செல்வார்கள் என்று தெரிகிறது.

Also Read:  சில்லுனு மழை.. ஸ்கூட்டரில் ஜாலி ரைடு - விராட் கோலி அனுஷ்கா வைரல் வீடியோ..!

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா. , ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்

First published:

Tags: Corona, Covid-19, Rahul Dravid, Team India