• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்திய அணிதான், சந்தேகமேயில்லை: ஷேன் வார்ன்

உலகின் சிறந்த டெஸ்ட் அணி இந்திய அணிதான், சந்தேகமேயில்லை: ஷேன் வார்ன்

shane warne

shane warne

ஓவல் டெஸ்ட் இந்திய வெற்றியை ஷேன் வார்ன் பாராட்டுகையில் இந்திய அணி உலகின் சிறந்த டெஸ்ட் அணி என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்தில் மிகச்சிறப்பாக ஆடி தொடரை வெல்லும் சாத்தியத்துடன் 2-1 என்று முன்னிலை வகிக்கும் இந்திய அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது, ஷேன் வார்ன் பாராட்டுகையில் இந்திய அணி உலகின் சிறந்த டெஸ்ட் அணி என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார்.

    ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. பும்ராவின் ரிவர்ஸ் ஸ்விங் பவுல்டுகள், ஜடேஜாவின் பவுலர் காலடித்தட சாதக பவுலிங் ஆகியவை திருப்பு முனை ஏற்படுத்த ஷர்துல் தாக்கூர் ஜோ ரூட்டை பவுல்டு செய்ய உமேஷ் யாதவ் டெய்ல் எண்டர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்ப இங்கிலாந்து 100/0 என்பதிலிருந்து 210 ரன்களுக்குச் சுருண்டது.

    இந்த வெற்றியின்போது வர்ணனையிலிருந்த ஷேன் வார்ன் இந்திய அணியின் ஆக்ரோஷத்தை பாராட்டிப் பேசினார். பிறகு ட்விட்டரிலும் தன் கருத்தைப்பதிவு செய்தார், “ஒட்டுமொத்த இந்திய அணி மற்றும் விராட் கோலிக்குப் பாராட்டுக்கள், பயங்கரமான வெற்றி. கடந்த 12 மாதங்களாக நீங்கள் அனைவரும் நிகழ்த்திய சாதனை அற்புதமானது. நிச்சயமாக உலகிலேயே சிறந்த அணிதான். இந்த பட்டத்துக்கு உரியவர்கள் நீங்கள்தான். லாங் லிவ் டெஸ்ட்” என்று ட்வீட் செய்துள்ளார்.

    இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கிரேட்டஸ்ட் டீம் அண்டர் கிரேட்டஸ்ட் கேப்டன் என்று டிவிட்டர்வாசிகள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

    அடிலெய்டில் 36 ஆல் அவுட் பிறகு தொடரை 2-1 என்று வென்றோம், சென்னை டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றோம். பிறகு தொடரை 3-1 என்று வென்றோம். லீட்ஸில் தோற்றோம் ஆனால் ஓவலில் வென்றோம் என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.

    இந்திய அணியை விமர்சிக்கும் மைக்கேல் வான், “சில சமயங்களில் அழுத்தமான சூழ்நிலைகளில் நம்மை விட இந்திய அணி பெட்டராக ஆடுகிறது. சரியான தருணத்தில் இந்தியா எழுச்சி பெறுகிறது” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: