ஹோலி பண்டிகையை இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பாக பேட்ஸ்மேன் சுப்மன் கில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் கடைசி மற்றும் 4 ஆவது டெஸ்ட்போட்டி வரும் வியாழன் அன்று அகமதாபாத் நரேந்தி மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோவை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ் மற்றும் கமென்டுகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram
முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்தது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது. அகமதாபாத் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்குடன் ஆஸ்திரேலியாவும், தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணியும் களத்தில் இறங்க உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket