இன்று தொடங்கும் டெஸ்ட் தொடர்.... சொந்த மண்ணில் சாதனை படைக்குமா இந்திய அணி?

இன்று தொடங்கும் டெஸ்ட் தொடர்.... சொந்த மண்ணில் சாதனை படைக்குமா இந்திய அணி?
இந்திய அணி
  • News18
  • Last Updated: October 2, 2019, 7:14 AM IST
  • Share this:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. சொந்த மண்ணில் தொடர்ந்து 11-வது முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும் முனைப்பில் இந்திய அணி ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20 , 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதலாவது போட்டி, விசாகப்பட்டினம் மைதானத்தில் காலை 9-30 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்துக்குப் பதிலாக, விரித்திமான் சாகா களமிறக்கப்படுவார் என்று இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினும், ரவீந்திர ஜடேஜா-வும் சுழற்பந்து வீச்சில் ஈடுபடுவார்கள் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஹனுமா விகாரி செயல்படுவார்.


தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் தென் ஆப்பிரிக்க அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்த நெருக்கடியிலிருந்து மீள டூ பிளஸிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டி வருகிறது.

எனினும் சொந்த மண்ணில் தொடர்ந்து 11-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைக்க இந்திய அணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் தொடர்ச்சியாக 10 தொடரில் வெற்றி பெற்று முதல் இடத்தை பகிர்ந்துள்ளன.

Also watch
First published: October 2, 2019, 7:03 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading