ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2023 இந்தியாவில் நடைபெறும்  கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை அறிவிப்பு... சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி

2023 இந்தியாவில் நடைபெறும்  கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை அறிவிப்பு... சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி

இந்திய அணி

இந்திய அணி

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கான போட்டி அட்டவணை அறிவிக்ப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற 6 டி20, 9 ஒரு நாள் மற்றும் 4 டெஸட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடர் நடைபெற உள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மும்பை, புனே, ராஜ்கேட் ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் கவுகாதி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதனாங்களில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் ஜனவரி 18, 21 மற்றும் 24 தேதிகளில் ஹைதராபாத், ராஜ்பூர் மற்றும் இந்தூர் மைதானங்களில் நடைபெற உள்ளது. டி20 தொடர் ஜனவரி 27, 28 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற உள்ளது.

இந்தியா சுற்றுப்யணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் பார்டர் - காவஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. மேலும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒரு நாள் போட்டி மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Also Read : கேட்ச் பிடிக்க சென்ற இலங்கை வீரருக்கு முகத்தில் பந்து தாக்கியதில் 4 பற்கள் உடைந்தது

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13 ,நாக்பூர்

2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21 ,டெல்லி

3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

ஒரு நாள் போட்டி தொடர் மார்ச் 17, மார் 19 மற்றும் மார்ச் 22 ஆகிய தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் சென்னை ஆகிய மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: BCCI, Cricket